திருநெல்வேலி மாவட்டத்தில் 2007 ஆண்டில் 1.8% சதவிதமாக இருந்த பாதிப்பு பலதுறைகளின் ஒத்துழைப்பால் 2020 ஆண்டு 0.07% ஆக குறைந்தது. இந்த ஆண்டில் 0.06% ஆக குறைந்துள்ளது. எனவே இனி வருங்காலங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் அனைவருடைய ஒத்துழைப்பு மற்றும் பல துறைகளின் செயல்பாடுகளால் எச்.ஐ.வியால் எந்த ஒரு நபரோ, குடும்பமோ அல்லது குழந்தைகளே பாதிக்கப்படக் கூடாது என்ற உறுதியுடன் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு பேசினார்.
முன்னதாக உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு வாசிக்க அனைத்துதுறை அலுவலர்கள், பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர். பின்னர் எச்.ஐ.வி/ எய்ட்ஸ் தடுப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் சிறப்பாக பணியாற்றிய 50 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.கிருஷ்ணலீலா, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரவிசந்திரன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி தலைமை மருத்துவர் மணிமாலா, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுண்ணுபிரியல் துறை தலைவர் மரு.பூங்கொடி, டான்சாக்ஸ் திட்ட அலுவலர் ஜெகதீசன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நோடல் அலுவலர் மரு. அமுதா, மாவட்ட மேற்பார்வையாளர் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு அலகு ஜெயகுமார், மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment