Friday, December 3, 2021

கர்நாடகத்தில் என்ஜினீயரிங் கல்வி கட்டணம் 30 சதவீதம் உயர்வு

 542 என்ஜினீயரிங் கல்லூரிகள்


engineering College fees increased



கர்நாடகத்தில் மொத்தம் 542 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதில் 408 கல்லூரிகள் தனியாருக்கு சொந்தமானது. மேலும் 134 அரசு கல்லூரிகள் உள்ளன. இதில் பெங்களூருவில் தான் அதிகளவில் என்ஜினீயரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 156 தனியார் கல்லூரிகளும், 12 அரசு கல்லூரிகளும் என மொத்தம் 168 என்ஜினீயரிங் கல்லூரிகள் பெங்களூருவில் மட்டும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதில் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணமாக ரூ.23,810 வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக என்ஜினீயரிங் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. 

ரூ.10 ஆயிரம் உயர்வு

இந்த நிலையில் கர்நாடக அரசு தேர்வு ஆணையம், என்ஜினீயரிங் கல்வி கட்டணத்தை 30 சதவீதம் அதிரடியாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. அதாவது ஏற்கனவே இருந்த கல்வி கட்டணத்தில் ரூ.10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 
இதன்படி கர்நாடக அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கட்டணமாக ரூ.33,810-ம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கட்டணமாக ரூ.43,810-ம், முதல் தர தனியார் கல்லூரிகளில் கட்டணமாக ரூ.83,526-ம், 2-ம் தர தனியார் கல்லூரிகளில் கட்டணமாக ரூ.90,060-ம், தொலைதூர கல்லூரி மற்றும் தனியார் பலக்கலைக்கழகங்களில் கட்டணமாக ரூ.90,2943-ம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 

மாணவர்கள் அதிர்ச்சி

திடீரென்று என்ஜினீயரிங் கல்லூரி கட்டணத்தை அரசு உயர்த்தியதால் என்ஜினீயரிங் மாணவ-மாணவிகளும், பெற்றோர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவர்கள், கல்வி கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment