Wednesday, February 24, 2016

Electric train engine factory in nanguneri can expect in budget ?

வேண்டும் ரயில்வே தொழிற்சாலை!

2006ல் நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க 2600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பிறகு அந்தப் பணி கிடப்பில் போடப்பட்டது. அந்த இடத்தில் ரயில்வேக்கான சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ரயில்வே துறையில் அதிக வேலைவாய்ப்பு தரும் தொழிற்சாலைகள் அனைத்தும் வட இந்தியாவிலேயே உள்ளன. 

திருச்சி, பொன்மலை தொழிற்சாலையை விரிவுபடுத்தி ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையாக மாற்ற வேண்டும் என்று 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் பயனில்லை. இதைப்போல் தென்னக ரயில்வேக்கு உட்பட்ட பாலக்காட்டில் புதிய ரயில் பெட்டித் தொழிற்சாலை அமைக்கப்படும் என 2008 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்த முடியாத காரணத்தால் அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நாங்குனேரியில் ஏற்கனவே 2600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 

அந்த இடத்தில் ரயில் எஞ்சின் தொழிற்சாலை அமைக்க வேண்டும். இந்திய ரயில்வேக்கு 2020ம் ஆண்டுக்குள் சுமார் 5334 டீசல் எஞ்சின்களும், 4281 மின்சார எஞ்சின்களும், 50,880 ரயில் பெட்டிகளும் தேவைபடுகிறது. இதற்கென 1,20,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று ரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வாய்ப்பு இங்கு வர அரசியல் கட்சியினர் குரல் கொடுக்க வேண்டும்’’





Thursday, February 4, 2016

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகள் -கலெக்டர் ஆய்வு

நெல்லை மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் நேற்று டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து கலெக்டர் மு.கருணாகரன் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். கடையநல்லு£ர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் வந்து சிகிச்சை பெற்று வரும் நோயளிகளை நேரில் சென்று பார்த்து, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை பற்றி டாக்டர்களிடம் கேட்டார். மேலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:–

டெங்கு தடுப்பு 

பொதுமக்கள், வீட்டில் உள்ள தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், தொட்டிகள் போன்றவற்றில் கொசுக்கள் முட்டையிடாத வண்ணம் மூடி வைத்து பயன்படுத்த வேண்டும். 3 நாட்களுக்கு ஒரு முறை பாத்திரங்கள், தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும். மேல்நிலை தொட்டிகளில் இடைவெளி இல்லாதாவறு மூடி வைக்க வேண்டும். வீட்டை சுற்றிலும் மழை நீர் தேங்காத வண்ணம் தேவையற்ற டப்பாக்கள், டயர்கள், சிரட்டைகள், உடைந்த பானைகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை அப்புறபடுத்தி அழிக்கவேண்டும். பயன்படுத்தாத உரல்களை தலை கீழாக கவிழ்த்தி வைக்க வேண்டும், கவிழ்த்த முடியாத உரல்களில் மண் நிரப்பி மழைநீர் தேங்காதவாறு வைக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பணியாளர்கள் தங்களது வீடுகளுக்கு வரும்போது அவர்களுக்கு தகுந்த ஒத்தழைப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் டெங்கு நோயை முற்றிலுமாக அழிக்க முடியும்.

இவ்வாறு கலெக்டர் மு.கருணாகரன் கூறினார்.

Wednesday, February 3, 2016

multi-level parking facility proposed for Tirunelveli Junction bus stand



A meeting on constructing an elevated parking facility at Tirunelveli Junction bus-stand was conducted at the Collectorate on Tuesday.

Addressing the meeting, Collector M. Karunakaran said a team of experts inspected the bus stand recently for constructing elevated parking facility for bikes and four-wheelers since parking of vehicles in and around the bus terminus was a nagging issue for the past several years. The problem worsens during festival seasons with the influx of more vehicles.

As per the proposal submitted by experts, good number of pillars would be erected to create a concrete floor at a 6-metre height in the bus terminus for about 1,200 square metres, where 170 four-wheelers and 1,200 bikes could be parked.

Since the parking bay coming up on the first floor would be connected by a concrete slope, the public would be able to park their vehicles easily.

“The proposed parking facility, to be created at a cost of Rs. 25 crore, may generate an additional revenue of up to Rs. 30 lakh through parking fee,” Dr. Karunakaran said.
Deputy Commissioner of Police (Crime and Traffic) Rajan and Commissioner of Tirunelveli Corporation S. Sivasubramanian participated in the meeting.

Tuesday, February 2, 2016

குழந்தை காப்பகங்களில் பணியாளர்கள், சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் மு.கருணாகரன் தகவல்

நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் குழந்தை காப்பகங்களுக்கு பணியாளர்கள், சமையலர் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம் என கலெக்டர் மு.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
குழந்தைகள் காப்பகம்
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சி பகுதியில் 2, நகரசபை பகுதியில் 4, நகர பஞ்சாயத்து பகுதிகளில் 9, கிராம பஞ்சாயத்து பகுதிகளில் 6 ஆகிய பகுதிகளில் மொத்தம் 21 குழந்தை காப்பகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த காப்பகங்களுக்கு குழந்தைகள் காப்பக பணியாளர் மற்றும் சமையலர் பணி நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. க
தொகுப்பூதியம்
பணி நியமனம் தற்காலிகமானது. அங்கன்வாடி குழந்தைகள் காப்பக பணியாளர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.3 ஆயிரமும், சமையலருக்கு மாத தொகுப்பூதியம் ரூ.1,500–ம் வழங்கப்படும். 1–1–2016 அன்று 25 வயது முதல் 35 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். குழந்தைகள் காப்பகம் அமைந்துள்ள பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
சமையலர் பணிக்கு 1–1–2016 அன்று 20 வயது முதல் 40 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். காலிப்பணியிடங்கள் இன சுழற்சி முறையில் நடைபெற உள்ளது.
15–ந் தேதி
விண்ணப்பங்கள் வருகிற 15–ந் தேதி மாலை 5 மணி வரை அந்தந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவே வரவேற்கப்படுகிறது.
இவ்வாறு நெல்லை மாவட்ட கலெக்டர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.