Thursday, February 4, 2016

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகள் -கலெக்டர் ஆய்வு

நெல்லை மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் நேற்று டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து கலெக்டர் மு.கருணாகரன் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். கடையநல்லு£ர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் வந்து சிகிச்சை பெற்று வரும் நோயளிகளை நேரில் சென்று பார்த்து, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை பற்றி டாக்டர்களிடம் கேட்டார். மேலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:–

டெங்கு தடுப்பு 

பொதுமக்கள், வீட்டில் உள்ள தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், தொட்டிகள் போன்றவற்றில் கொசுக்கள் முட்டையிடாத வண்ணம் மூடி வைத்து பயன்படுத்த வேண்டும். 3 நாட்களுக்கு ஒரு முறை பாத்திரங்கள், தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும். மேல்நிலை தொட்டிகளில் இடைவெளி இல்லாதாவறு மூடி வைக்க வேண்டும். வீட்டை சுற்றிலும் மழை நீர் தேங்காத வண்ணம் தேவையற்ற டப்பாக்கள், டயர்கள், சிரட்டைகள், உடைந்த பானைகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை அப்புறபடுத்தி அழிக்கவேண்டும். பயன்படுத்தாத உரல்களை தலை கீழாக கவிழ்த்தி வைக்க வேண்டும், கவிழ்த்த முடியாத உரல்களில் மண் நிரப்பி மழைநீர் தேங்காதவாறு வைக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பணியாளர்கள் தங்களது வீடுகளுக்கு வரும்போது அவர்களுக்கு தகுந்த ஒத்தழைப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் டெங்கு நோயை முற்றிலுமாக அழிக்க முடியும்.

இவ்வாறு கலெக்டர் மு.கருணாகரன் கூறினார்.

No comments:

Post a Comment