Tuesday, November 30, 2021

Thangam Thennarasu: We will take industries to Tier II cities and get jobs for locals

 How difficult is taking industries down south?

It has been a constant need. A dedicated corridor like the MaduraiTuticorin industrial corridor was announced by Kalaignar Karunanidhi in 2009. Unfortunately, nothing happened in the past 10 years. An SPV was established to attract investments there, but it never took off. There was no focus or thrust. Soon you will see more investments in southern Tamilnadu. A dedicated furniture park is coming up in Tuticorin. Investments are coming in the solar and wind energy sectors; textile factories are evincing interest.


What is being done to meet the changing industry needs?

It is important to have workers near the place of work for operational efficiency. Sipcot has established residential quarters for garment unit workers in Tirupur, similar to the Chinese model. They are in the process of setting up one more in Oragadam for Foxconn. We will look at setting up such facilities wherever the industry needs.


Most of the software professionals working in Chennai are from southern Tamil Nadu. They can work from these towns. There will be huge cost benefits. We have started discussions with software companies to go to tier II cities where we have announced three Tidel parks. Zoho Corporation is a story worth emulating. HCL Tech is becoming big in Madurai.

திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி பேரூராட்சியில் தரம் உயா்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக் கோரிக்கை

 திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி பேரூராட்சியில் தரம் உயா்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக் கோரி அங்குள்ள வியாபாரிகள் சங்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மூலக்கரைப்பட்டி வியாபாரிகள் சங்கத்தினா் அளித்த மனு: மூலக்கரைப்பட்டி பேரூராட்சியில் சுமாா் 20 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனா். இந்தப் பேரூராட்சியை சுற்றிலும் சுமாா் 40 கிராமங்கள் உள்ளன. மூலக்கரைப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் அனைவரும் இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை நம்பியே உள்ளனா். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினந்தோறும் 150 முதல் 200 நோயாளிகள் வருகின்றனா்.

மேலும் செவ்வாய்க்கிழமை தோறும் 70 முதல் 80 பேருக்கு கற்பகால பரிசோதனைக்கு நடைபெற்றது. மகப்பேறும் நடைபெற்று வந்தது. கடந்த ஜூலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் கட்டடம் முழுவதும் சேதமடைந்ததால், புதிய கட்டடம் கட்டிய பிறகுதான் மருத்துவமனை முழு அளவில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது ஊராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. புதிய கட்டடம் கட்டும்போது சுற்று வட்டார மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சுமாா் 50 படுக்கைகளை கொண்ட தரம் உயா்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

Monday, November 29, 2021

ராமேசுவரம் அருகே பிரப்பன்வலசை கடற்கரையில் கடல் நீர் சாகச விளையாட்டு மையம் விரைவில் தொடக்கம் | SEA WATER GAMES CENTER NEAR RAMESHWARAM

 ராமேசுவரம் அருகே பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் கடல் நீர் சாகச விளையாட்டு மையம் விரைவில் தொடங்கப்படஉள்ளது.

 A seawater adventure sports center will soon be set up at the Prabhanvalasa beach area near Rameswaram.



ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 237 கி.மீ. நீளத்துக்கு கடற்கரை உள்ளது. ராமேசுவரம் கடலோரப் பகுதியில் தெற்கே மன்னார் வளைகுடா கடற்கரையும், வடக்கே பாக் ஜலசந்தி கடற்கரையும் நீர் சாகச விளையாட்டுப் போட்டிகள் நடத்த சிறந்த இடங்களாக உள்ளன.


கடந்த 50 ஆண்டுகளில் தனுஷ் கோடியிலிருந்து தலைமன்னார் வரையிலுமான பாக் ஜலசந்தி கடல் பகுதியை 14 பேர் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளனர்.


கடந்த 2015-ம் ஆண்டு தமிழக அரசின் சுற்றுலாத் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ராமேசுவரத்தில் சர்வதேச நீர் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.


இதையடுத்து ராமேசுவரம் கடலோரப் பகுதியில் நீர் சாகச விளையாட்டு மையம் தொடங்கினால் சுற்றுலா வளர்ச்சி மேம்படும். மீனவ இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.


எனவே, இங்கு நீர் சாகச விளையாட்டு மையத்தை தொடங்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.


இந்நிலையில் ராமேசுவரத்துக்கு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் பிரப்பன்வலசை கடற்கரைப் பகுதியில் சுற்றுலாத்துறையின் ஒருங்கிணைப்பில் கடல் நீர் சாகச விளையாட்டு மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் நேற்று ஆய்வு செய்தார்.


முதல் கட்டமாக பிரப்பன் வலசையில் நீச்சல், துடுப்புப் படகு, பெடல் படகு, அலைச் சறுக்கு உள்ளிட்ட கடல் நீர் சாகச விளையாட்டுகளுக்கான மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

நாங்குநேரி அருகே பரிசு விழுந்திருப்பதாக கூறி, வாலிபரிடம் நூதன முறையில் ரூ.35 லட்சம் மோசடி

 ரூ.3.60 கோடி பரிசு


நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள இலந்தைகுளம் பாரதி நகரைச் சேர்ந்தவர் வேத முத்து மகன் டான் (வயது 24). இவர் கேட்டரிங் படித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர்கள், தாங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு ரூ.3 கோடியே 60 லட்சம் பரிசு விழுந்து இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

ரூ.35 லட்சம் மோசடி

அதனைப் பெறுவதற்கு தாங்களுக்கு ரூ.35 லட்சத்தை குறிப்பிட்ட வங்கி எண்ணுக்கு அனுப்பவேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனை உண்மை என்று நம்பிய டான், முதலில் அவரது வீட்டை ரூ.10 லட்சத்துக்கு விற்று அதனை குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். தொடர்ந்து தனது நண்பர்கள் சிலரிடம் ரூ.20 லட்சம் வரை கடனாகவும், தனது தாயாரின் நகைகளை ரூ.5 லட்சத்திற்கு அடமானம் வைத்தும் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் குறிப்பட்டபடி ரூ.3 கோடியே 60 லட்சம் பரிசுத் தொகையை டானுக்கு மர்ம நபர்கள் வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். அப்போதுதான் மர்ம நபர்கள் நூதன முறையில் மோசடி செய்தது டானுக்கு தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து டான், நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சாவு; மருதகுளம் (Maruthakulam) தனியார் ஆஸ்பத்திரி பூட்டி சீல் வைப்பு

 நாங்குநேரி:

நெல்லை அருகே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி இறந்தார். இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

தொழிலாளி

நெல்லை அருகே மூன்றடைப்பை அடுத்த கோவைகுளத்தைச் சேர்ந்தவர் பேச்சி. இவருடைய மகன் மாரிமுத்து (வயது 24). கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனே அவரை மருதகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் மாரிமுத்துவின் உடல்நிலை மோசமடைந்ததால், அவரை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சாவு

இதற்கிடையே தனது மகனுக்கு மருதகுளம் தனியார் ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக, மூன்றடைப்பு போலீஸ் நிலையத்தில் பேச்சி புகார் செய்தார். அதன்பேரில், அந்த ஆஸ்பத்திரியில் சித்த மருத்துவ டாக்டராக பணியாற்றிய சக்தி, அவருடைய நண்பரும் நெல்லை சித்த மருத்துவ கல்லூரி 2-ம் ஆண்டு மாணவருமான தேனியைச் சேர்ந்த அருண்குமார் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாரிமுத்து சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

‘சீல்’ வைப்பு

தொடர்ந்து தவறான சிகிச்சை அளித்த டாக்டர் உள்ளிட்டோரை கைது செய்யக்கோரி மாரிமுத்து உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். இந்நிலையில் தென்காசி சுகாதாரத்துறை இணை இயக்குனர் வெங்கட்ரெங்கன், நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி மருதகுளத்தில் இயங்கி வந்த அந்த தனியார் ஆஸ்பத்திரியை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தொடர்ந்து அதிகாரிகள் மாரிமுத்துவின் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.



நன்றி 
dailythanthi.com

Thursday, November 25, 2021

Largest investment from PVT sector in south TN, Tirunelveli : Foundation laid

 1. Britannia industries Ltd

2. Subam Paper mills and boards ltd

Subam Paper(500 crore) - 2000 Jobs
Britannia(550 crore) - 350 Direct jobs + 650 indirect jobs

 Britannia industries Ltd






FMCG-major Britannia Industries has signed a memorandum of understanding (MoU) with the Tamil Nadu government. The FMCG firm will invest Rs550cr in the state for building a Total Foods Company.

On Wednesday, Britannia stock surged by as much as 1.5% with an intraday high of Rs3801.15 per piece. However, at around 1.49 PM, the stock has corrected and was trading at Rs3771 per piece up 0.70% on Sensex.

Britannia tweeted saying, "Britannia is proud to announce the signing of an MoU with the Govt of Tamil Nadu as a next step towards building a Total Foods Company. This partnership will pave the way for growth in consumer demand & contribute towards building our economy."

The company will develop its business in Gangaikondan and Tirunelveli districts in Tamil Nadu. Further, Britannia is set to generate employment 1,000 direct and indirect employment opportunities. 

Britannia Proposed factory in Gangaikondan , Tirunelveli









Tata solar plant - Gangaikondan 






Wednesday, November 24, 2021

பாளையங்கோட்டையில் மருத்துவ கல்லூரி மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி

 பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து மற்ற மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 


மருத்துவ சிகிச்சை 

அவர்கள் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையொட்டி விடுதியில் தங்கிருந்த மற்ற மாணவிகள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ கல்லூரி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

நெல்லை பேட்டையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

 நெல்லை பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் அரசகுமார் (வயது 19). பேட்டை பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. அப்போது அரசகுமார் தனது செல்போனுக்கு சார்ஜ் ஏற்றுவதற்காக, சார்ஜரை மின்பெட்டியில் பொருத்தி சுவிட்ச் போட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சுவிட்ச் மூலம் மின்சாரம் தாக்கியதில் அரசகுமார் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார்.

Tuesday, November 23, 2021

Tata Group to set up Rs 3,000 crore solar power plant in Tirunelveli district.

  டாடா குழுமம் திருநெல்வேலி மாவட்டத்தில் 3000 கோடி ரூபாய் செலவில் சோலார் மின் உற்பத்தி பிரிவை துவங்கவுள்ளது.

வளரும் தேவைகளுக்கு ஏற்ப மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகும். அதேநேரம் மரபு சாரா முறையில் மின் உற்பத்தியை பெருக்குவது சுற்றுச்சூழலுக்கு நலம் பயக்கும்.

சூரிய மின் சக்தி




அந்த வகையில்தான் சோலார் மின் சக்திக்கு மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் சூரிய ஒளி அதிகம் கிடைக்கும் என்பதால் அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் போது தற்சார்பு அடைய முடியும் என்பதோடு சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படாது.

3000 கோடி மதிப்பீடு

அந்தவகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் டாடா குரூப் சோலார் நிறுவனம் மின் உற்பத்தி நிறுவனத்தை அமைக்க உள்ளது. 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2030ஆம் ஆண்டுக்குள் 25 ஜிகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அளவுக்கு இந்த மின்உற்பத்தி நிலையம் அமைய இருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

கடன் வசதி

இந்த மின் உற்பத்தி நிலையத்தில் பேட்டரி ஸ்டோரேஜ் வசதிக்காக 20 ஜிகாவாட் உற்பத்தி மையம் ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டத்துக்காக மூன்று ஜிகாவாட் ஸ்டோரேஜ் போன்றவை அமைக்கப்படும். நிதி கடன் வசதிகளை மாநில அரசு ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் திருநெல்வேலி மாவட்டம்?

திருநெல்வேலி மாவட்டம் பெரும்பாலும் மழை இல்லாத பகுதியாக இருப்பதால் அங்கு சோலார் மின் உற்பத்தியை தொடங்குவது பலனளிக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவுக்கு காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

செந்தில் பாலாஜி

மரபுசாரா மின் உற்பத்தியில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் முன்னிலையில் இருக்கும் நிலையில் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அங்கு சோலார் மின் உற்பத்தி ஆலை அமைக்க இருப்பதாக வந்துள்ள தகவல் முக்கியமானதாகும். இந்த ஆலையை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரமாக செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sunday, November 21, 2021

தடுப்பூசி செலுத்தினால் மட்டும் பொது இடங்களில் அனுமதி.

தடுப்பூசி செலுத்தினால் மட்டும் பொது இடங்களில் அனுமதி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது பெரும் ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை 9 இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று உள்ளது. இதில் மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு செல்கின்றனர்.


இருப்பினும் சிலர் தடுப்பூசி போடுவதற்கு இன்னும் முன்வராமல் உள்ளனர். இதனால் தமிழக அரசு தடுப்பூசி செலுத்தினால் மட்டும் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே பொது இடங்கள், மார்க்கெட், தியேட்டர்கள், பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்று பொதுசுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Saturday, November 20, 2021

பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் இன்று (20-11-2021) மின்தடை ஏற்படும் இடங்கள்

 பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று 20ம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

எனவே அந்தந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகர், ரகுமத் நகர், நீதிமன்ற பகுதி,சாந்தி நகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திருமலைகொழுந்துபுரம், மணப்படை வீடு, கீழ நத்தம், பாளையங்கோட்டை பஸ் நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, அன்புநகர், முருகன்குறிச்சி, கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம்,

முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேலகுலவ ணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன்ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வகாதர் தெரு, உமறு புலவர் தெரு, ஆசாத் ரோடு, பி.எஸ்.என். கல்லூரி, பெருமாள் புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு, பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம் மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப் பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரை செல்வி ஆகிய பகுதிகளுக்கு நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை நெல்லை நகர்ப்புற மின்வினியோக செயற் பொறியாளர் முத்துக்குட்டி தெரிவித்துள்ளார்.

நெல்லையப்பர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

 பரணி மகா தீபத்தை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக எடுத்து வந்து, சுவாமி சன்னதி தெருவில் உள்ள சொக்கப்பனை முக்கு பகுதிக்கு கொண்டு வந்து மகாருத்ர தீபம் எனும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

நெல்லையப்பர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு முந்தைய நாள் பரணி நட்சத்திரத்தில் பரணி மகா தீபம் ஏற்றப்படும். அதன்படி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது.

சுவாமி நெல்லையப்பர் சன்னதி மகாமண்டபத்தில் அமைந்திருக்கும் நந்தி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பரணி தீபத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா ஹோமங்கள் செய்து சுவாமி நெல்லையப்பருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

பின்னர் சுவாமி மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பரணி மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து தீபத்திற்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, பரணி மகா தீபத்தை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக எடுத்து வந்து, சுவாமி சன்னதி தெருவில் உள்ள சொக்கப்பனை முக்கு பகுதிக்கு கொண்டு வந்து மகாருத்ர தீபம் எனும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

பாளையங்கோட்டை அழகிய மன்னர் ராஜகோபாலசுவாமி கோவிலில் திருக்கார்த்திகை உற்சவத்தையொட்டி நேற்று காலையில் ராஜகோபாலசாமி மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடந்தது. மாலையில் கோவில் முழுவதும் 5,008 தீபம் ஏற்றப்பட்டது. இரவில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதேபோல் பெருமாள் கோவில்களில் நேற்று சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

Friday, November 19, 2021

மிதிவண்டி பயணத்தை மாநிலம் முழுவதும் கட்டாயமாக்க வேண்டும்- ராமதாஸ்

 இளைஞர்கள் மிதிவண்டியில் பயணிக்க வேண்டும். மிதிவண்டி புரட்சி செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.85,670 கோடியை மிச்சப்படுத்த முடியும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவதற்கான சிறிய, ஆனால், மிகவும் பயனளிக்கக்கூடிய திட்டத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கியுள்ளது.


சென்னையில் உள்ள வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களும் வாரந்தோறும் புதன்கிழமைகளில் இரு சக்கர ஊர்திகளிலோ, மகிழுந்து உள்ளிட்ட வாகனங்களிலோ அலுவலகம் வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது இது நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வாரியத்தின் தலைவர் உதயன் நேற்று தமது இல்லத்திலிருந்து அலுவலகத்திற்கு மிதிவண்டியில் பயணம் செய்திருக்கிறார்.


பெரும்பான்மையான ஊழியர்கள் மிதிவண்டிகள் மூலமாகவும், வெகுதொலைவிலிருந்து வரும் பணியாளர்கள் பொதுப்போக்குவரத்து மூலமும் அலுவலகம் சென்றுள்ளனர். இந்த சிறிய முயற்சி மூலம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் காற்று மாசு 20% குறைந்திருக்கிறது.

புவிவெப்பமயமாதல் தான் இன்றைய சூழலில் உலகுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. உலக அளவில் அதிக கரியமில வாயுவை வெளியேற்றும் மூன்றாவது நாடான இந்தியாவுக்கு புவிவெப்பமயமாதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் உண்டு.


நிலக்கரி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் தான் புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த இயலும். அதற்கு இத்தகைய முயற்சிகள் பயனளிக்கும்.

இப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைமை அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சி படிப்படியாக விரிவுபடுத்தப்பட வேண்டும்.நம்மை வாழவைக்கும் பூவுலகைக் காப்பதற்கான இந்தக் கடமையை இளைஞர்கள் தான் நிறைவேற்ற வேண்டும். இளைஞர்கள் நினைத்தால் இதை நிச்சயமாக சாதிக்க முடியும். மிதிவண்டியில் பயணிப்பதன் மூலம் உடலை கட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்; சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்; போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறித்த இடத்தை குறித்த காலத்திற்குள் சென்றடைய முடியும். எரிபொருள் வாகனங்களில் இத்தகைய பயன்கள் இல்லை.


ஐரோப்பிய நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் இரு சக்கர ஊர்திகளுக்கு பதிலாக மிதிவண்டிகளைத் தான் பயன்படுத்துகின்றனர். அதற்காக அங்கு தனிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையிலும் அத்தகைய கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று பாமக ஏற்கனவே கூறி வருகிறது.

இந்திய அளவில் செய்யப்பட்டுள்ள ஆய்வுகளின்படி இரு சக்கர மற்றும் நான்கு சக்கர ஊர்திகளை பயன்படுத்துவோரில் 50 விழுக்காட்டினர் குறைந்த தூர பயணத்திற்கு மிதிவண்டிகளை பயன்படுத்தத் தொடங்கினால் ஆண்டுக்கு ரூ.2,700 கோடி எரிபொருள் செலவை மிச்சப்படுத்த முடியும்.


இப்போது மகிழுந்துகள் - இரு சக்கர ஊர்திகளை பயன்படுத்துவோர் 8 கி.மீ.க்கும் குறைவான தூரத்துக்கு பயணிக்க, ஆண்டுக்கு 240 நாட்கள் மிதிவண்டிகளை பயன்படுத்துவதால் 10 ஆண்டுகளில் கிடைக்கும் மருத்துவப் பயன்களின் மதிப்பு மட்டும் ரூ.4.76 லட்சம் கோடி (ஆண்டுக்கு ரூ.47,670 கோடி), காற்று மாசு தடுக்கப்படுவதால் கிடைக்கும் பயன்கள் ரூ.24,100 கோடி ஆகும். புள்ளிவிவரங்களின்படி பார்த்தால் மிதிவண்டி புரட்சி செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.85,670 கோடியை மிச்சப்படுத்த முடியும்.


எனவே, புவிவெப்பமயமாதல், காற்று மாசு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், வாரத்திற்கு ஒரு நாள் எரிபொருள் ஊர்திகளை தவிர்த்து விட்டு, மிதிவண்டி மற்றும் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்ற நடைமுறை தமிழ்நாட்டின் அனைவரும் கடைபிடிப்பதை நோக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்குத் தேவையான தனிப்பாதை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளையும் அரசு மேம்படுத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Thursday, November 18, 2021

பெற்றதும் இழந்ததும்

 Television வந்தது

புத்தகம் படிப்பதை மறந்தோம் 


Mobile phone வந்தது

கடிதம் எழுதுவது என்பதை மறந்தோம் 


AC வந்தது

மரத்தின் நிழல் தேடி இளைப்பாற மறந்தோம் 


Village போய்  City வந்தது

மண்  வாசனை மறந்தோம் 


perfume கள் வந்தது

மலர்களின் வாசனை மறந்தோம் 


FastFood வந்தது

சோறும் பருப்பும் மறந்தோம் 


car ம் bike ம்  வந்தது

நடந்து செல்ல மறந்தோம் 


computer வந்தது

வார்த்தைகளுக்கு spellings மறந்தோம் 


இதெல்லாம் நடந்து கொண்டிருக்கையில் 

கடைசியாக  What'sapp வந்தது

நிம்மதியாக தூங்க மறந்தோம் 

Upcoming Key Industrial parks in TN

Upcoming Key Industrial parks in TN:


1. EV Park, Manallur,Chennai

2. Electronics Park- Pillaipakkam & Manallur,Chennai

3. Polymer Park - Manallur

4. Medical Devices Park-Oragadam

5. Future Mobility Park- Krishnagiri

6. Defence Park- Sulur,Kovai

8. Intl Furniture Park - Tuticorin

9. Mega Textile Park - Virudhunagar

10. Food Parks - Theni,Manaparai & Tindivanam

Nellai Trade center : 80% of construction work completed and will be opened soon.

 80% of work completed and will be opened soon.

1. Consists of 2 buildings and one food court
2. 1500 peoples can occupy each building
3. 1500 cars can park underground this buildings
4. It will be useful for traders belongs to Tuticorin, Tenkasi, Kanyakumari, விருதுநகர்,Ramnad and Nellai.



Monday, November 15, 2021

நெல்லை: அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஓவிய போட்டி நடந்தது

 முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் விழா குழந்தைகள் தினமாக நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

விழாவில் 1-முதல் 8-வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 



அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமை தாங்கினார். தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கோட்ட பொறியாளர் ஆனையப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்த போட்டிகளுக்கு நடுவர்களாக இசக்கி, சுரேஷ், ஆலப்பநாதன் ஆகியோர் செயல்பட்டனர். முடிவில் கலையாசிரியர் சொர்ணம் நன்றி கூறினார்.

Sunday, November 14, 2021

பொறியியல் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்: இன்டர்னல் மார்க் 2 மடங்காக உயர்வு

 பொறியியல் படிப்புகளில் அக மதிப்பீட்டுக்கான மதிப்பெண் 20 சதவீதத்திலிருந்து 40 ஆக உயா்த்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகள் 2021ஆம் ஆண்டிற்கான புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் மாணவா்களுக்கான பாடத்திட்டம், தோ்வு, மதிப்பெண்கள் வழங்கும் முறை உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


தற்போது நடைமுறையில் இருந்து வரக்கூடிய அக மதிப்பீட்டு மதிப்பெண் 20 சதவீதத்திலிருந்து 40 ஆக உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரையில் 20 சதவீத மதிப்பெண் அக மதிப்பீட்டுக்கும், 80 சதவீத மதிப்பெண் எழுத்துத் தோ்விற்கும் வழங்கப்பட்டுவந்தன.


புதிய நடைமுறையில் (40+60) 40 சதவீத மதிப்பெண் அக மதிப்பீட்டுக்கும், 60 சதவீத மதிப்பெண் எழுத்துத் தோ்வுக்கும் வழங்கப்பட உள்ளது. மேலும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெறுவதற்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த ஒட்டுமொத்த சராசரி மதிப்பெண் 7 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு முதல் மாணவா்கள் தாங்கள் வைத்துள்ள அரியா்களை முடிக்க நான்கு வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. புதிய நடைமுறையின்படி இந்த விதிமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவா்கள் படிப்பினைப் பாதியில் நிறுத்திவிட்டு இடைநின்றால், மீண்டும் சோ்ந்து தொடா்ந்து படிக்கவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நிகழ் கல்வியாண்டில் அரியா் வைத்துள்ள மாணவா்கள் அடுத்தடுத்து வரக்கூடிய பருவத் தோ்வுகளில் அரியா் தோ்வு எழுதி தோ்ச்சி பெறலாம் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.