டாடா குழுமம் திருநெல்வேலி மாவட்டத்தில் 3000 கோடி ரூபாய் செலவில் சோலார் மின் உற்பத்தி பிரிவை துவங்கவுள்ளது.
வளரும் தேவைகளுக்கு ஏற்ப மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகும். அதேநேரம் மரபு சாரா முறையில் மின் உற்பத்தியை பெருக்குவது சுற்றுச்சூழலுக்கு நலம் பயக்கும்.
சூரிய மின் சக்தி
அந்த வகையில்தான் சோலார் மின் சக்திக்கு மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் சூரிய ஒளி அதிகம் கிடைக்கும் என்பதால் அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் போது தற்சார்பு அடைய முடியும் என்பதோடு சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படாது.
அந்தவகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் டாடா குரூப் சோலார் நிறுவனம் மின் உற்பத்தி நிறுவனத்தை அமைக்க உள்ளது. 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2030ஆம் ஆண்டுக்குள் 25 ஜிகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அளவுக்கு இந்த மின்உற்பத்தி நிலையம் அமைய இருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் பெரும்பாலும் மழை இல்லாத பகுதியாக இருப்பதால் அங்கு சோலார் மின் உற்பத்தியை தொடங்குவது பலனளிக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவுக்கு காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
மரபுசாரா மின் உற்பத்தியில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் முன்னிலையில் இருக்கும் நிலையில் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அங்கு சோலார் மின் உற்பத்தி ஆலை அமைக்க இருப்பதாக வந்துள்ள தகவல் முக்கியமானதாகும். இந்த ஆலையை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரமாக செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment