Sunday, November 21, 2021

தடுப்பூசி செலுத்தினால் மட்டும் பொது இடங்களில் அனுமதி.

தடுப்பூசி செலுத்தினால் மட்டும் பொது இடங்களில் அனுமதி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது பெரும் ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை 9 இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று உள்ளது. இதில் மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு செல்கின்றனர்.


இருப்பினும் சிலர் தடுப்பூசி போடுவதற்கு இன்னும் முன்வராமல் உள்ளனர். இதனால் தமிழக அரசு தடுப்பூசி செலுத்தினால் மட்டும் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே பொது இடங்கள், மார்க்கெட், தியேட்டர்கள், பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்று பொதுசுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment