Saturday, December 25, 2021

நெல்லையில் கடும் குளிர் எதிரொலி. குல்லா, சொட்டர் விற்பனை ஜோர் - Severe cold in Nellai. Beanie, Sweater Sales Jore

 இரவு முதல் காலை வரை நீடிக்கும் கடும் குளிர் எதிரொலியாக நெல்லையில் குல்லா, சொட்டர் விற்பனை சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்துள்ள நிலையில் தற்போது குளிர் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் மார்கழி, தை, மாசி மாதங்களில் குளிர் அதிகமாக இருக்கும். பனி காலங்களில் இரவு முதல் காலை வரை குளிர் இருக்கும். மூடுபனியின்போது காலை நேரங்களிலும் பனி மூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் இந்நேரங்களில் சாலைகளில் செல்லும் வாகனங்கள் விளக்குகளை ஒளிர விட்டபடியே செல்வதுண்டு. கடும் பனிப் பொழிவு காலங்களில் வெளியில் செல்வோர் அதை எதிர்கொள்ளும் விதமாக தலை மற்றும் காதுகளை மூடியபடி குல்லா மற்றும் உடலில் சொட்டர் போன்றவற்றை அணிவதுண்டு.

Beanie

இந்நிலையில் தற்போது நெல்லையில் இரவு முதல் காலை வரை நீடிக்கும் கடும் பனி பொழிவால் அந்நேரங்களில் வெளியில் செல்லும் மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகின்றனர். பனிப் பொழிவால் உண்டாகும் கடும் குளிரால் ஏற்படக்கூடிய உடல்நல பிரச்னைகளை தடுப்பதற்கு குல்லா மற்றும் ெசாட்டர்கள் உதவுகிறது. குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் தற்போது நெல்லை மாநகரில் கொக்கிரகுளம் பகுதியில் சாலையோரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தக்கூடிய குல்லாக்கள் மற்றும் சொட்டர்கள் பல அழகிய வண்ணங்களில் கண்ணைக் கவரும் விதத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. அவை ரூ.50 முதல் ரூ.300 வரை விற்கப்படுகிறது. 

நெல்லை மாநகர பகுதிகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் குளிர் காலங்களில் இதுபோன்ற குல்லா, சொட்டர் மற்றும் பெட்சீட் போன்றவற்ைற சாலையோரங்களில் விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்களும் பனிப் பொழிவை எதிர்கொள்வதற்காக தங்களுக்கு பிடித்தமான வண்ணங்களில் குல்லா, சொட்டர் மற்றும் பெட்சீட்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

No comments:

Post a Comment