Monday, December 6, 2021

நில மோசடிக்கு போலி ஆவணம் தயாரித்து உதவிய சார் பதிவாளர் பாளையில் கைது - registrar who helped in preparing a fake document arrested in Palai

நெல்லை, டிச. 5: போலி ஆவணம் தயாரித்து நில மோசடிக்கு உடந்தையாக இருந்த கங்கைகொண்டான் சார் பதிவாளரை பாளையில் போலீசார் நேற்று கைதுசெய்தனர்.  பாளை பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி பகவதி (61). வள்ளியூரில் இவருக்கு சொந்தமான 5  ஏக்கர் 20 சென்ட் இடத்தை பவுல் வினோத் என்பவர் பகவதி போல் ஆள்மாறாட்டம் செய்ததுடன் அவரைப்போல வேறு நபரை அழைத்து சென்று போலி ஆவணம் தயாரித்து அழகேசன் என்பவருக்கு விற்பனை செய்தார்.


பின்னர் அந்த இடத்தை அழகேசன் சுப்பிரமணியன் என்பவருக்கு விற்பனை செய்தார். இந்த போலி ஆவணங்களை தயார் செய்ய பாளை ரஹ்மத்நகரை சேர்ந்தவரும், கங்கைகொண்டான் சார் பதிவாளருமான செந்தில்குமார் உடந்தையாக செயல்பட்டாராம். இதுகுறித்து தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்த பகவதி, இதுகுறித்து நெல்லை எஸ்.பி. மணிவண்ணனிடம் புகார் அளித்தார்.


 இதையடுத்து எஸ்பி பிறப்பித்த உத்தரவின் பேரில் நெல்லை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பி ஜெயபால் பர்னபாஸ், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் இதில் தொடர்புடையவர்களை தேடிவந்தனர். இந்நிலையில் சார் பதிவாளர் செந்தில்குமாரை போலீசார் பாளையில் நேற்று கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment