திருநெல்வேலியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் RuralBasket குளோபல் ஃபுட் இன்னோவேஷன் பைப்லைனில் உலகளாவிய இறுதிப் போட்டியாளர்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
எனது சொந்த ஊர் திருநெல்வேலி, ஆனால் தற்போது சென்னையில் வசித்து வருகிறேன். 22 ஆண்டுகளாக காப்பீட்டுத் துறை மற்றும் மென்பொருள் துறையில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பணிபுரிந்துவிட்டு, தற்போது இத்துறையில் நுழைந்துள்ளேன். விவசாயியின் விலைபொருள் நேரடியாக மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த வெப்சைட்டைத் தொடங்கினோம் என்கிறார்.
“ஓர் விவசாயி விற்பனை செய்யும் 1 கிலோ உளுந்து, ரூ.80-க்கு அவரிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் அது மக்கள் கைகளில் கிடைக்கும்போது ரூ.140 அல்லது 150-க்கு விற்கப்படுகிறது. இடையில் இருக்கும் பணம் எங்கே போகிறது. இடைத்தரகர்கள் விவசாயிகளின் உழைப்பையும், மக்களின் பணத்தையும் சுரண்டுகின்றனர்," என்றார்.
இதைத் தடுக்க நானும், என் நண்பர் பழனி ராஜனும் ஓர் முடிவெடுத்தோம். விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து, அதனை அப்படியே பொதுமக்களிடம் சேர்க்கவேண்டும். இதற்காக தொடங்கப்பட்டதுதான் இந்த RuralBasket இ-காமர்ஸ் தளம்.
இதன்மூலம் விவசாயிகளிடம் இருந்து பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படாத, இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருள்களை மொத்தமாக கொள்முதல் செய்து, எங்கள் RuralBasket மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கும் மிகக் குறைந்த பேக்கிங் மற்றும் போக்குவரத்து கட்டணம் மட்டும் வசூலித்து அவர்களின் வீடுகளுக்கே நல்ல தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்கிறோம் என்கிறார்.
இவர்களின் RuralBasket மூலம் விவசாயியிடம் இருந்து சந்தை விலைக்கு கொள்முதல் செய்யப்படும் பொருட்கள், கிட்டத்தட்ட அதே சந்தை விலைக்கே நுகர்வோருக்கும் கிடைக்கிறது என்பதே இதன் சிறப்பம்சம்.
இவர்களிடம் பாரம்பரிய அரிசி வகைகள், பருப்பு வகைகள், தூய மரச்செக்கு எண்ணெய் வகைகள், மசாலாப் பொருள்கள், சிறுதானிய வகைகள், பீட்ரூட் பவுடர், முருங்கா பவுடர் என சுமார் 220 வகையான பொருட்களை இவர்கள் RuralBasket மூலம் மக்களுக்கு சந்தை விலைக்கே விற்பனை செய்து வருகின்றனர். இந்த தளம் மூலம் வியாபாரம் தொடங்கப்பட்டு 7 மாதங்களே ஆன நிலையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை பெற்று, வெற்றிகரமாக அவர்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.
மேலும், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மக்களுக்கு தரமான பொருட்களைக் கொண்டு சேர்த்து அவர்களின் நலனில் முக்கியப் பங்காற்றி வருவதே எங்களின் முக்கிய நோக்கமாகும். இதில் பெரிய அளவில் லாப நோக்கை எதிர்பார்த்து நாங்கள் செயல்படவில்லை. மக்களுக்கு சுத்தமான உணவுப் பொருட்கள் கிடைக்கவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள், என்றார் ஐசக்.
துணியால் உருவாக்கப்பட்ட தரமான முகக் கவசங்கள்.
அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எங்களின் பங்களிப்பாக முற்றிலும் மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட முகக் கவசங்களையும், நொச்சி, அருகம்புல், மஞ்சள், வேம்பு போன்ற பல்வேறு இயற்கைக் கிருமி நாசினிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஹேன்ட்வாஷையும் தற்போது அறிமுகப்படுத்தி, மிகக் குறைந்த விலையில் வழங்கி வருகிறோம்.
No comments:
Post a Comment