நெல்லை மாநகர பகுதியில் இன்று முதல் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகர காவல் ஆணையர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெல்லை காவல் ஆணையர் கூறியதாவது:
நமது நாட்டின் பல பகுதிகளில் மரபு திரிந்த கொரோனா வகை, ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் விதமாக திருநெல்வேலி மாநகர எல்கைக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது
எனவே பொதுமக்கள் தங்கள் நலனை காத்துக்கொள்வதோடு மற்றவர்களுக்கும் நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக முகக்கவசம் அணிந்து, சமூக விலகலை கடைபிடித்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.மாநகர காவல் எல்கைக்குட்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது அபராதத்துடன் கூடிய சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து காத்துக்கொள்ள சமூக இடைவெளியை கடைபிடித்தால் மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்..
No comments:
Post a Comment