கேபிள் டி.வி. ஆபரேட்டர்
நாங்குநேரி அருகே உள்ள வீரான்குளத்தை சேர்ந்தவர் சொக்கேஷ் (வயது 42). இவர் மூன்றடைப்பு அருகே உள்ள மலையன்குளத்தில் கேபிள் டி.வி. ஆபரேட்டராக உள்ளார். சம்பவத்தன்று மலையன்குளம் சென்று விட்டு வீரான்குளத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
மூன்றடைப்பு அருகே உள்ள ஆயநேரி சாலையில் வந்த போது, அந்த வழியாக வந்த வேன் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சொக்கேஷ் பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சொக்கேசை மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சொக்கேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் அங்கு பிணவறையில் குளிரூட்டப்படும் எந்திரம் பழுதானதால், அவரது உடலை நெல்ைல அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவரான பெங்களூருவைச் சேர்ந்த லூந்தன்குமார் (45) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொக்லைன் ஆபரேட்டர்
மூன்றடைப்பு மேலூர் பகுதியைச் சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் சந்தனகுமார் (40), அதே ஊரைச் சேர்ந்த விஜயபால் (40) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்றடைப்பு அருகே சென்று ெகாண்டு இருந்தனர்.
அப்போது, சாலையோரம் நின்று கொண்டு இருந்த மினி லாரி மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சந்தனகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். விஜயபால் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மூன்றடைப்பு போலீசார், படுகாயம் அடைந்த விஜயபாலை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment