Saturday, December 25, 2021

திருவாதிரை- நெல்லைச் சீமையில் நடராஜ தரிசனம்! - Thiruvathirai- Nataraja Darshan in Nellai Seemai!

 ஒரே சிற்பி செய்த ஐந்து நடராஜர் திருமேனிகள் அபூர்வ தரிசனம்!


திருவாதிரை- நடராஜரை தரிசிக்க உகந்த திருநாள்! நடராஜர் என்றதும் நம் நினைவுக்கு வருவது சிதம்பரம்தான். பன்னிரு திருமுறை களும், நால்வர் பெருமக்களும், ஞானநூல்கள் பலவும் போற்றும் புண்ணிய பூமி இது. அற்புதமான இந்தத் தலத்துடன் தொடர்புடைய வேறு நான்கு தலங்கள் உண்டு. அவை: செப்பறை, கரிசூழ்ந்த மங்கலம், கட்டாரி மங்கலம், கரிவேல மங்கலம். சிதம்பரத்தையும் சேர்த்து ஐந்து தலங்களையும் பஞ்ச நடராஜ க்ஷேத்திரம் எனப் போற்றுவர்.


இந்த ஐந்து தலங்களிலும் எழுந்தருளியிருக்கும் நடராஜ மூர்த்தங்கள், நமசிவாய முத்து என்ற ஒரே ஸ்தபதியால் வடிக்கப்பட்டவை என்பது விசேஷம். இவற்றை `பஞ்ச நடராஜ க்ஷேத்திரங்கள்’ என்று அடியார்கள் போற்றுவர். இந்தத் தலங்களில் ஆடல்வல்லான் எழுந்தருளிய திருக்கதையை நாம் அறிவது அவசியம். இந்தக் கதை தில்லையில் தொடங்குகிறது



சிவனார் அளித்த செப்புக் காசு!

ந்தக் காலத்தில் தில்லையை ஆண்ட சிங்கவர்மன் எனும் மன்னன், தனது தோல் நோய் நீங்குவதற்காக இறைவனை பிரார்த் தித்து, காட்டில் தவம் இயற்றி வந்தான்.

ஒரு நாள், தாகம் மேலிட்டதால் நீர் அருந்துவதற்காக ஒரு குளத்துக்கு வந்தான். குளத்தின் அருகே புலிக்கால் முனிவரும், பதஞ்சலி முனிவரும் தவம் இருப்பதைக் கண்டு, அவர்களை வணங்கி ஆசி பெற்றான். பிறகு குளத்தில் இறங்கி நீராடினான். மறு கணம், அவனது தோல் நோய் நீங்கியது. மகிழ்ச்சியில் செய்வதறியாது திகைத்தான்.

அப்போது அவனிடம், ‘`மன்னா! இதுதான் தில்லை வனம். இந்தப் பொய்கையின் பெயர் சிவகங்கை. ஆடற்பெருமானின் ஆனந்த தாண்டவம் எங்களை மகிழ்விக்கிறது’’ என்று விளக்கினர். பின்னர், முனிவர்களது ஆசியுடன் இறைவனின் ஆனந்தத் தாண்டவத்தைக் காணும் பேறு பெற்றான் சிங்கவர்மன். இந்த சந்தோஷத்தின் வெளிப்பாடாக, நடராஜப் பெருமானுக்கு ஆலயம் எழுப்ப முடிவு செய்தான்.

அதன்படி, சிற்பிகளை வரவழைத்த மன்னன், இறைவனது திருமேனியைப் பேரழகுடன் அமைக்க வேண்டும் என்று கட்டளையிட்டான். அவர்களிடம் தாமிரம் தந்து, செப்புத் திருமேனியை உருவாக்கப் பணித்தான். விரைவில், செப்புத் திருமேனி உருவானது. அதன் அழகைக் கண்டு வியந்தான் சிங்கவர்மன். ‘தாமிரத் திருமேனியே இந்த அளவுக்கு மிளிர்கிறது என்றால், பொன்னால் சிலை வடித்தால் எப்படி இக்கும்?’என்று எண்ணியவன், சிற்பிகளிடம் பொன் தந்து, பொன்னாலான சிலை செய்ய உத்தரவிட்டான்.

இந்த நிலையில் சிவனாரின் திருவிளையாடல் தொடங்கியது!

எவ்வளவும் முயன்று திருவிக்கிரக படிமம் சரியே அமையாமல் போனது. தலைமை சிற்பியான நமசிவாய முத்து மிகவும் கலங்கினார். அப்போது அந்த இடத்துக்கு முதியவராக வந்த இறைவன் சில செப்புக் காசுகளைக் கொடுத்து, தங்கத் துடன் இதையும் சேர்த்து சிலை வடிக்கும்படி கூறினார்.

முதலில் ‘மன்னனின் விருப்பம் இதுவல்லவே...’ என்று சிற்பிகள் குழம்பினர். ஆனால், இறைவனாரின் பேச்சுக்கு மயங்கிய சிற்பிகள் ஒரேயொரு செப்புக் காசை மட்டும் தங்கத்துடன் கலந்தனர். இதனால், தங்கத் திருமேனிக்கு பதில் மீண்டும் செப்புத் திருமேனியே உருவானது. அதைக் கண்ட மன்னன் கோபம் அடைந்தான். தங்கத்தைக் கவர்ந்து கொண்டு செப்பினால் சிலை செய்திருக்கிறார்கள் சிற்பிகள் என்று கருதி அவர்களைச் சிறையிலிட்டான்.

அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய இறைவன் நடந்ததைக் கூறி, ‘`உன் கண்களுக்கு மட்டும் நான் பொன்மேனியாகக் காட்சி தருவேன். இந்த விக்கிரகத்தை எனது தில்லை அம்பலத்தில் நிறுவி வழிபடுவாய்’’ என அருளி மறைந்தார். அதன்படி இரண்டாவதாகச் செய்யப்பட்ட திருமேனி தில்லையில் எழுந்தருளியது.



இந்த நிலையில் முதலில் உருவான செப்புத் திருமேனியை எங்கே நிறுவுவது என்று மன்னனும் சிற்பிகளும் யோசனையில் ஆழ்ந்தனர். அன்று தலைமை சிற்பியின் கனவில் இறைவன் தோன்றினார்.

“சிற்பியே! நான் தென்னாட்டில் எழுந்தருள ஆசைப்படுகிறேன். இந்த விவரம் கூறித்து அரசனுக்கும் ஆணையிட்டிருக்கிறேன். ஆகவே நீ தாமிரச் சிலை வடிவில் உள்ள என்னைத் தலையில் சுமந்தபடி தென்பாண்டி நாட்டுக்குச் செல்வாயாக. அங்கே எந்த இடத்தில் சிலை பாரமாகத் தோன்றுகிறதோ, அங்கேயே எம்மை இறக்கி வைத்து விடு’’ என்று ஆணையிட்டு மறைந்தார்.

ஈசனின் ஆணைப்படி முதலில் உருவான நடராஜரின் செப்புத் திருமேனியைத் தலையில் சுமந்தபடி தென்னகம் நோக்கிப் புறப்பட்டார் நமசிவாயமுத்து. அவரின் சீடர்களும் உடன் சென்றனர்.

கனவில் கிடைத்த உத்தரவு!

ணப்படை எனும் நகரை மையமாகக் கொண்டு தாமிரபரணி தீரத்தை அப்போது ஆண்டு வந்தவன் முழுதுங்கண்ட ராம பாண்டியன். இவன் சிறந்த சிவபக்தன்; தினமும் நெல்லைக்குச் சென்று நெல்லையப்பரையும், காந்திமதி அம்மனையும் வழிபட்ட பின்னரே உணவு உட்கொள்வது வழக்கம்.

ஒருநாள்... இவனது பக்தியைச் சோதிக்க எண்ணினார் இறைவன். அதன் விளைவால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது; மன்னனால் நெல்லையப்பரை தரிசிக்க செல்ல முடியவில்லை. கலங்கித் தவித்தவன், உறங்கிப் போனான். அவனது கனவில் தோன்றிய இறைவன், ‘வனத்துக்குப் போ. ஓரிடத்தில் காற் சிலம்பொலி கேட்கும்; எறும்புகள் சாரை சாரையாகத் திரியும். அங்கே... என் வடிவைக் காண்பாய். எறும்பு காட்டுகிற இடத்தில் கோயில் எழுப்பு. இனி நீ அங்கேயே எம்மை வழிபடலாம்’ என்று அருளி மறைந்தார்.

இந்த நிலையில்தான் தில்லைச் சிற்பிகள் தாமிரபரணி நதிக்கரையை அடைந்திருந்தனர். குறிப்பிட்ட இடத்தில் சிலையின் கனம் அதிகரித்தது போல் உணர்ந்தார் நமசிவாயமுத்து. ஆகவே, அங்கேயே சிலை இறக்கிவைக்கப்பட்டது. பின்னர், களைப்பு மிகுதியால் உறங்கிப் போனார்கள் சிற்பிகள். அவர்கள் கண்விழித்தபோது சிலையைக் காணவில்லை! தவித்துப் போனவர்கள், மன்னன் முழுதுங்கண்ட ராம பாண்டியனிடம் வந்து முறையிட்டனர். அவன் காவலர்களுடன் சேர்ந்து சிலையைத் தேடிப் புறப்பட்டான்.

ஓரிடத்தில் தாரை- தப்பட்டை, சங்கு, சேண்டி மற்றும் தேவதுந்துபி முழக்கத்துடன் சிலம்பொலியும் கேட்டது. எங்கிருந்து வருகிறது ஒலி? எனும் திகைப்புடன் நின்ற மன்னன், சாரை சாரையாக எறும்புகள் ஊர்ந்து செல்வதைக் கண்டான். அவற்றைப் பின்தொடர்ந்தான். குறிப்பிட்ட ஓரிடத்தில் ஆனந்தக் கூத்தாடும் இறைவனின் திருமேனியை தரிசித்தான். ஆம் சிற்பிகள் வடித்த முதல் திருமேனி அங்கு இருந்தது. அந்த இடத்திலேயே கோயில் எழுப்பினான். அதுவே செப்பறை ஆனந்தக் கூத்தர் திருக்கோயில்!

இங்ஙனம் ஓரிடத்தில் உருவான இரண்டு சிலைகளில் இரண்டாவது தில்லையிலும் முதலாவது செப்பறையிலும் எழுந்தருளியது.இவை போக இன்னும் மூன்று தலங்கள் உண்டு என்று பார்த்தோம் அல்லவா? அதுபற்றிய விவரத்தை இனி காண்போம்.


கரத்தை இழந்த சிற்பி!

மசிவாயமுத்து உருவாக்கிய திருமேனி செப்பறையில் எழுந்தருளிய அந்தக் காலத்தில் கட்டாரிமங்கலம் எனும் பகுதியை வீரபாண்டியன் எனும் மன்னன் ஆண்டுவந்தான். இவன், முழுதுங்கண்ட ராம பாண்டியனின் உறவினன். ஒருமுறை ராமபாண்டியனைக் காண வந்தவன், செப்பறை நடராஜரை தரிசித்தான்.

அந்த நடராஜப் பெருமானின் திருமேனி அழகைக் கண்டு வியந்து தனக்கும் இதுபோன்று ஒரு திருமேனி வேண்டும் எனக் கேட்டுக்கொண்டான். சிற்பம் செய்ய தனக்கு அமைதியான ஓர் இடம் வேண்டும் எனக் கேட்டார் ஸ்தபதி. அதன்படி தாமிரபரணியின் தென் கரையில் மூங்கில் நிறைந்த ஓரிடம் அவருக்கு ஒதுக்கப்பட்டது. அங்கே இரண்டு சிலைகள் செய்துதரும்படி வீரபாண்டியன் கேட்டுக்கொண்டான். அவற்றில் ஒன்றை கட்டாரிமங்கலத்திலும் மற்றொன்றை நெல்லையப்பர் கோயிலிலும் எழுந்தருளச் செய்ய விரும்பினான்.

குறிப்பிட்ட நாட்களில் இரண்டு திருமேனிகள் தயாராயின. மன்னன் சிலைகளைக் காண வந்தான். அவற்றின் அழகில் மெய்ம்மறந்தான். விதியின் விளையாட்டு அவன் மூளை வேறுவிதமாக சிந்தித்தது. இப்படியான அழகுச் சிற்பம் வேறு எவருக்கும் கிடைக்கக் கூடாது என்று கருதினான். விளைவு... ஸ்தபதி உயிரோடு இருந்தால்தானே இப்படி வேறொரு சிற்பத்தை உருவாக்க முடியும். அவரைக் கொன்று விட முடிவுசெய்தான். வீரர்களை ஏவினான்.

சிற்பி இருக்கும் இடத்துக்கு வீரர்கள் விரைந் தனர். அவர், தான் உருவாகிய நடராஜரின் பாதங் களைப் பற்றியபடி உறங்கிக் கொண்டிருந்தார். `ஆண்டவ னிடம் அடைக்கலமாகி இருக்கும் இந்த நல்ல உள்ளத்தினரை நாம் ஏன் கொல்லவேண்டும்’ என்று வீரர்கள் சிந்தித்தனர். ஆகவே, அவர் வேறொரு சிற்பத்தைச் செய்ய முடியாதபடி வலக்கையை மட்டும் துண்டித்துவிட்டார்கள்.



ஸ்தபதி அங்கிருந்து தப்பித்து ஓடினார். வீரர்களோ புதிய விக்கிரகங்கள் இரண்டையும் தூக்கிச் சென்றனர். அதற்குள் இருள் சூழ்ந்துவிட்டிருந்தது. திக்கு தெரியாத வீரர்களின் கூட்டம் ஓரிடத்தில் இரண்டாகப் பிரிந்து விலகியது. ஒருசாரார், தங்களிடம் இருந்த விக்கிரகத்தை மன்னன் வீரபாண்டியனிடம் ஒப்படைத்தனர்.

மற்றொரு பிரிவினர் ஆற்றின் கரையோரமாகப் பயணித்தனர். திடுமென ஆற்றில் வெள்ளம் சூழ்ந்ததால் உயிர் பிழைத்தால் போதும் என்று விக்கிரகத்தை ஆற்று நீரில் போட்டுவிட்டு ஊர்போய்ச் சேர்ந்தனர். சில நாள்கள் கழித்து தாமிரபரணி தென்கரையில் உள்ள கரிசூழந்த மங்கலம் எனும் ஊர்க்காரர்கள், ஆற்றில் போடப்பட்ட விக்கிரகத்தைக் கண்டெடுத்து, மேடான ஓரிடத்தில் வைத்து வழிபடத் தொடங்கினர்.

இந்த விவரங்களை அறிந்த முழுதும்கண்ட ராம பாண்டியன், மனம் வருந்தினார் அவர். வீரபாண்டியன் மீது கோபம் கொண்டு படையெடுத்துச் சென்று, அவனைத் தண்டித்தார். பிறகு வீரபாண்டியன் மன்னிப்பு கோரினான். அவன் மன்னிக்கப்பட்டான். கட்டாரி மங்கலத்திலும் கரிசூழந்த மங்கலத்திலும் அற்புதமாய் ஆலயங்கள் எழும்பின. இனி ஐந்தாவது விக்கிரகம் உருவான திருக்கதையை அறிவோம்.



ஐந்தாவது நடராஜர்!

லக்கரத்தை இழந்த ஸ்தபதி, தன் உறவினர்களுடன் களக்காடு அருகே உள்ள கருவேலங்குளம் பகுதிக்கு வந்தார். அந்தப் பகுதியை செளந்திரபாண்டியன் எனும் மன்னன் ஆண்டுவந்தான்.

அவனுடைய மகள் மனநலம் குன்றித் திகழ்ந்தாள். எவ்வளவோ வைத்தியம் செய்தும் குணமாகவில்லை. தன் மகள் குணமாக வேண்டும் என்று களக்காடு தலத்தில் அருளும் சத்தியவாகீசரை வணங்கி வந்தான். மகளைக் குணப்படுத்தும் நபருக்கு அவளை மணம் முடித்து வைப்பதாகவும் நாட்டைப் பரிசளிப்பதாகவும் பறை சாற்றியிருந்தான்.

ஒரு நாள் வயதுமுதிர்ந்த அந்தணர் ஒருவர் மன்னனைக் காண வந்தார். ``ஊரின் எல்லையில் வனப்பகுதியில், வலக்கரத்தை இழந்த ஸ்தபதி ஒருவன் இருக்கிறான். அவன் ஒரு கரத்தால் குளத்து நீரை எடுத்து மகளுக்கு மூன்று முறை கொடுக்கச் சொல். உன் மகள் குணம் அடைவாள்’’ என்றார். அதன்படியே மன்னன் மகள் குணம் அடைந்தாள்.

மன்னன் மகிழ்ந்தான். அப்போது ஓர் அசரீரி ஒலித்தது. ``இந்தக் குளத்தின் அருகில் ஓர் ஆலயம் எழுப்பு’’ என்று இறைவனின் குரல் கட்டளையிட்டது. விரைவில் ஆலயம் எழும்பியது. சிற்பியின் கதையை அறிந்த செளந்திர பாண்டியன் தனக்காகவும் ஒரு நடராஜர் விக்கிரகம் செய்துதரும்படி வேண்டினான். வலக்கரத்தை இழந்தும் மனம் தளராமல் வைத்தியர் ஒருவரை துணைக்கு வைத்துக் கொண்டு பணியில் இறங்கினார். மிக அற்புதமான விக்கிரகம் உருவானது. அதன் அழகில் சிற்பியே சொக்கிப்போனார். ஆனந்த மிகுதியில், தன் இடக் கரத்தால் அந்த நடராஜரின் கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுத்தாராம். நடராஜரும் அற்புதமாய் கோயிலில் எழுந்தருளினார்.

மன்னன் மகிழ்ந்து சிற்பிக்கு பொன்னால் கரம் செய்து கொடுத்தான். அதனால் அவருக்குப் `பொன்னம்பல ஸ்தபதி’ என்ற பெயர் ஏற்பட்டது.

கருவேலங்குளத்தில் 5-வது நடராஜர் அருளும் கோயில் உள்ள இடம் மேலகருவேலங்குளம் என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள நடராஜர் படிமத்தில் ஸ்தபதியின் கைபட்ட வடு உள்ளதை தரிசிக்கலாம். வரும் திருவாதிரைத் திருநாளில் அன்பர்கள் இந்த நடராஜ திருத்தலங்களை தரிசித்து வரம் பெற்று வரலாம்.

நெல்லையில் கடும் குளிர் எதிரொலி. குல்லா, சொட்டர் விற்பனை ஜோர் - Severe cold in Nellai. Beanie, Sweater Sales Jore

 இரவு முதல் காலை வரை நீடிக்கும் கடும் குளிர் எதிரொலியாக நெல்லையில் குல்லா, சொட்டர் விற்பனை சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்துள்ள நிலையில் தற்போது குளிர் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் மார்கழி, தை, மாசி மாதங்களில் குளிர் அதிகமாக இருக்கும். பனி காலங்களில் இரவு முதல் காலை வரை குளிர் இருக்கும். மூடுபனியின்போது காலை நேரங்களிலும் பனி மூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் இந்நேரங்களில் சாலைகளில் செல்லும் வாகனங்கள் விளக்குகளை ஒளிர விட்டபடியே செல்வதுண்டு. கடும் பனிப் பொழிவு காலங்களில் வெளியில் செல்வோர் அதை எதிர்கொள்ளும் விதமாக தலை மற்றும் காதுகளை மூடியபடி குல்லா மற்றும் உடலில் சொட்டர் போன்றவற்றை அணிவதுண்டு.

Beanie

இந்நிலையில் தற்போது நெல்லையில் இரவு முதல் காலை வரை நீடிக்கும் கடும் பனி பொழிவால் அந்நேரங்களில் வெளியில் செல்லும் மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகின்றனர். பனிப் பொழிவால் உண்டாகும் கடும் குளிரால் ஏற்படக்கூடிய உடல்நல பிரச்னைகளை தடுப்பதற்கு குல்லா மற்றும் ெசாட்டர்கள் உதவுகிறது. குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் தற்போது நெல்லை மாநகரில் கொக்கிரகுளம் பகுதியில் சாலையோரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தக்கூடிய குல்லாக்கள் மற்றும் சொட்டர்கள் பல அழகிய வண்ணங்களில் கண்ணைக் கவரும் விதத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. அவை ரூ.50 முதல் ரூ.300 வரை விற்கப்படுகிறது. 

நெல்லை மாநகர பகுதிகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் குளிர் காலங்களில் இதுபோன்ற குல்லா, சொட்டர் மற்றும் பெட்சீட் போன்றவற்ைற சாலையோரங்களில் விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்களும் பனிப் பொழிவை எதிர்கொள்வதற்காக தங்களுக்கு பிடித்தமான வண்ணங்களில் குல்லா, சொட்டர் மற்றும் பெட்சீட்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

Tuesday, December 21, 2021

DigiNadu is growth-based digital marketing and technology company will be open In tirunelveli soon

 DigiNadu is growth-based digital marketing and technology company.They are a vibrant team of experienced digital enthusiasts who provide out-of-the-box ideas and solutions for clients.

https://diginadu.com/

This company was started by Thangavel Puhal from Tirunelveli. His aim is to create a global company from Tirunelveli and make tirunelveli proud.





Thangavel Puhal, CEO of DigiNadu & CBO of TaxNadu.com. With over 5+ years of experience in Business Growth Strategy & Marketing, he has helped and consulted many entrepreneurs to achieve their goals. He is a result-oriented marketeer and Campaign strategist that has helped 100+ companies and 1000+ entrepreneurs to achieve their targets, while also inspiring over 2000+ students through seminars. Mr Puhal firmly believes that the only way to grow is by helping others to grow.

Power outages have been announced at Tirunelveli Town due to Monthly maintenance work on 21st (TuesDay). நெல்லை பழையபேட்டை மற்றும் பொருட்காட்சி திடல் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று மின்தடை

 நெல்லை பழையபேட்டை மற்றும் பொருட்காட்சி திடல் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று  (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே அந்தந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் நெல்லை டவுன் மேல ரதவீதி மேல் பகுதிகள், தெற்கு ரதவீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரதவீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்திநகர், திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழில் பேட்டை, பாட்டப்பத்து, அபிஷேகபட்டி, பொருட்காட்சி திடல், நெல்லை டவுன், எஸ்.என். ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சுந்தரர் தெரு, பாரதியார் தெரு, சி.என்.கிராமம், குறுக்குத்துறை, கருப்பந்துறை, டவுன் கீழரத வீதி போஸ்ட் மார்க்கெட், ஏ.பி. மாடத் தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாட வீதி, கள்ளத்தி முடுக்கு தெரு, நயினார் குளம் தெரு, சத்தியமூர்த்தி தெரு, நயினார் குளம் மார்க்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரி நகர், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில் தெரு, ராம்நகர் மற்றும் ஊருடையான் குடியிருப்பு பகுதிகள் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை நெல்லை நகர்ப்புற மின்வினியோக செயற்பொறியாளர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

Friday, December 17, 2021

நெல்லை சாப்டர் பள்ளி சுவர் இடிந்து விபத்து. 3 மாணவர்கள் பலி! - Nellai Schaffter school wall collapses . 3 students killed!

நெல்லை பொருட்காட்சி திடல் அருகேவுள்ள சாஃப்டர் பள்ளியில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கல்வித்துறை அதிகாரிகள் அறிக்கை தர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


Nellai Schaffter school wall collapses



என்ஜினீயரிங் மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு அடுத்த மாதம் 21-ந் தேதி தொடங்குவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. - Anna university Semester Examination for Engineering announced

 கொரோனா தொற்றுக்கு மத்தியில் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே செமஸ்டர் தேர்வு உள்பட சில தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டன. அதேபோல், நடப்பு செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஆப்லைன் (நேரடி) முறையில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்தது.


Anna university Semester Examination for Engineering


ஆப்லைன் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் விதமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த அட்டவணையை மாற்றி அமைத்து, ஜனவரி 20-ந்தேதிக்கு பிறகு தேர்வு நடத்தஅறிவுறுத்தப்பட்டது. அந்தவகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்த அட்டவணையை ரத்துசெய்து, மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுவதற்கு ஏதுவாக காலஅவகாசம் கொடுத்து, தற்போது புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது.



Anna university Semester Examination for Engineering


Thursday, December 16, 2021

நெல்லை மாநகர் பகுதியில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 நெல்லை மாநகர பகுதியில் இன்று முதல் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகர காவல் ஆணையர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து நெல்லை காவல் ஆணையர் கூறியதாவது:

நமது நாட்டின் பல பகுதிகளில் மரபு திரிந்த கொரோனா வகை, ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் விதமாக திருநெல்வேலி மாநகர எல்கைக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

எனவே பொதுமக்கள் தங்கள் நலனை காத்துக்கொள்வதோடு மற்றவர்களுக்கும் நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக முகக்கவசம் அணிந்து, சமூக விலகலை கடைபிடித்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

மாநகர காவல் எல்கைக்குட்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது அபராதத்துடன் கூடிய சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து காத்துக்கொள்ள சமூக இடைவெளியை கடைபிடித்தால் மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்..

Power outages have been announced at Palai and Melappalayam due to Monthly maintenance work on 18th (Saturday)

  நெல்லை, டிச.16: பாளை மற்றும் மேலப்பாளையம் துணை மின்நிலையங்களில் வருகிற 18ம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள்


பாளை மற்றும் மேலப்பாளையம் துணை மின்நிலையங்களில் வருகிற 18ம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதன் காரணமாக விஎம் சத்திரம், கட்டபொம்மன்நகர், ரகுமத்நகர், நீதிமன்ற பகுதிகள், சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்க பகுதி, பாளை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திருமலைகொழுந்துபுரம், மனப்படைவீடு, கீழநத்தம், பாளை பஸ் நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, அன்புநகர், முருகன்குறிச்சி, கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்ைத பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலமாணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேலகுலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணாவீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம்,செல்வ காதர் தெரு, உமறுப்புலவர் தெரு, ஆசாத் ரோடு, பிஎஸ்என் கல்லூரி, பெருமாள்புரம், பொதிகைநகர், அரசு ஊழியர் குடியிருப்பு, பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ்நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி ஆகிய பகுதிகளில் 18ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மேலும் மின்னோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றி மின்பாதையை பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைக்கவேண்டும் என நகர்புற விநியோக செயற்பொறியாளர் முத்துக்குட்டி தெரிவித்துள்ளார்.

Wednesday, December 15, 2021

SMA Educational Institutions - எஸ்எம்ஏ கல்வி நிறுவனங்கள் இல்ல திருமணம் பல் துறையினர் பங்கேற்று வாழ்த்து

 பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ கல்வி குழுமத்தின் தாளாளர் ராஜசேகரன், செயலர் மற்றும் முதல்வர் டாக்டர் மகேஸ்வரி ராஜசேகரன் தம்பதியரின் மகன் இன்ஜினியர் ராஜ்குமார், கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் பாலூர் பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளி நிறுவனர் தங்கசாமி தாளாளர் சியாமளா தம்பதியின் மகள் டாக்டர் அபிஷா ஆகியோரின் திருமணம் பாலூர் பெஸ்ட் பள்ளியில் நடந்தது. தொடர்ந்து திருமண வரவேற்பு அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ கல்வி வளாகத்தில் நடந்தது.

 திருமணம் வரவேற்பு

 திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் 

பட அதிபர் கலைப்புலி தானு, 

சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குநர் சபாபதி, 

கோவை சரக டிஐஜி முத்துசாமி ஐபிஎஸ்,

 அன்புசெழியன் ஐபிஎஸ், 

எம்எல்ஏக்கள் 

ஆலங்குளம் மனோஜ் பாண்டியன், 

அம்பை. இசக்கி சுப்பையா, 

தென்காசி பழனி நாடார்,

 தென்காசி மாவட்ட அதிமுக செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, 

பாஜ மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் மனைவி சந்திரா, நாடார் மஹாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ்,

 தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், 

பொருளாளர் செல்வராஜ்,

 வியாபாரிகள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி முன்னாள் இயக்குநர்கள் அரவிந்த் பாண்டியன், பெரிஸ் மகேந்திரவேல், ஆடிட்டர் செல்வகணேஷ், ராஜ்குமார், 

கோவை மாவட்ட நாடார் சங்க தலைவர் சூலூர் சந்திர சேகரன்,

 இந்திய நாடார் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்திர பாண்டியன், 

சமத்துவ மக்கள் கழக தலைவர் முன்னாள் எம்எல்ஏ எர்ணாவூர் நாராயணன், துணைத் தலைவர் நிப்பான் தனுஷ்கோடி, 

முன்னாள் எம்.பிக்கள் ராமசுப்பு, 

கேஆர்பி பிரபாகரன், 

மூத்த மருத்துவர் தங்க பாண்டியன்,

 மூத்த வழக்கறிஞர் ஜெகதீசன், 

மதுரை பதஞ்சலி சில்க் நிர்வாக இயக்குனர் சரவணன், 

பாளை ஜான்ஸ் கல்லூரி முதல்வர் ஜான்கென்னடி, 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்வியியல் துறை தலைவர் வில்லியம் தர்மராஜா, 

வணிகர் சங்க பேரவையின் தென்காசி மாவட்ட தலைவர் டிபிவி வைகுண்ட ராஜா, 

செயலாளர் கணேசன், 

பொருளாளர் ஐவிஎன் கலைவாணன், 

ஆலங்குளம் தொழிலதிபர்கள் டிபிவி கருணாகரன், 

கோல்டன் செல்வராஜ், 

கோல்டன் தங்கம், 

கோவை மார்டின் குருப் இயக்குனர் ஜெயராஜ், 

ஆலங்குளம் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன், 

பாஜக விஜிஎஸ் கணேசன், 

மதுரை சமூக அறிவியல் கல்லூரி செயலர் தர்மசிங், 

தென்காசி மாவட்ட கவுன்சிலர்கள், 

ஆலங்குளம், கீழப்பாவூர் உள்ளாட்சி தலைவர்கள்,

 ஒன்றிய கவுன்சிலர்கள்,

 பஞ்சாயத்து கவுன்சிலர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், கல்வித் துறையினர் பெருந்திரளாக கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். எஸ்எம்ஏ கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜசேகரன், செயலர் மற்றும் முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் நன்றி தெரிவித்தனர்.

Tuesday, December 14, 2021

திருநெல்வேலியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் RuralBasket குளோபல் ஃபுட் இன்னோவேஷன் பைப்லைனில் உலகளாவிய இறுதிப் போட்டியாளர்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.- Tirunelveli based startup RuralBasket has been selected as one of the global finalists in Global Food innovation pipeline.

திருநெல்வேலியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் RuralBasket  குளோபல் ஃபுட் இன்னோவேஷன் பைப்லைனில் உலகளாவிய இறுதிப் போட்டியாளர்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது


 



எனது சொந்த ஊர் திருநெல்வேலி, ஆனால் தற்போது சென்னையில் வசித்து வருகிறேன். 22 ஆண்டுகளாக காப்பீட்டுத் துறை மற்றும் மென்பொருள் துறையில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பணிபுரிந்துவிட்டு, தற்போது இத்துறையில் நுழைந்துள்ளேன். விவசாயியின் விலைபொருள் நேரடியாக மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த வெப்சைட்டைத் தொடங்கினோம் என்கிறார்.

“ஓர் விவசாயி விற்பனை செய்யும் 1 கிலோ உளுந்து, ரூ.80-க்கு அவரிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் அது மக்கள் கைகளில் கிடைக்கும்போது ரூ.140 அல்லது 150-க்கு விற்கப்படுகிறது. இடையில் இருக்கும் பணம் எங்கே போகிறது. இடைத்தரகர்கள் விவசாயிகளின் உழைப்பையும், மக்களின் பணத்தையும் சுரண்டுகின்றனர்," என்றார்.

இதைத் தடுக்க நானும், என் நண்பர் பழனி ராஜனும் ஓர் முடிவெடுத்தோம். விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து, அதனை அப்படியே பொதுமக்களிடம் சேர்க்கவேண்டும். இதற்காக தொடங்கப்பட்டதுதான் இந்த RuralBasket இ-காமர்ஸ் தளம்.

இதன்மூலம் விவசாயிகளிடம் இருந்து பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படாத, இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருள்களை மொத்தமாக கொள்முதல் செய்து, எங்கள் RuralBasket மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கும் மிகக் குறைந்த பேக்கிங் மற்றும் போக்குவரத்து கட்டணம் மட்டும் வசூலித்து அவர்களின் வீடுகளுக்கே நல்ல தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்கிறோம் என்கிறார்.

இவர்களின் RuralBasket மூலம் விவசாயியிடம் இருந்து சந்தை விலைக்கு கொள்முதல் செய்யப்படும் பொருட்கள், கிட்டத்தட்ட அதே சந்தை விலைக்கே நுகர்வோருக்கும் கிடைக்கிறது என்பதே இதன் சிறப்பம்சம்.

இவர்களிடம் பாரம்பரிய அரிசி வகைகள், பருப்பு வகைகள், தூய மரச்செக்கு எண்ணெய் வகைகள், மசாலாப் பொருள்கள், சிறுதானிய வகைகள், பீட்ரூட் பவுடர், முருங்கா பவுடர் என சுமார் 220 வகையான பொருட்களை இவர்கள் RuralBasket மூலம் மக்களுக்கு சந்தை விலைக்கே விற்பனை செய்து வருகின்றனர். இந்த தளம் மூலம் வியாபாரம் தொடங்கப்பட்டு 7 மாதங்களே ஆன நிலையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை பெற்று, வெற்றிகரமாக அவர்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.

மேலும், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மக்களுக்கு தரமான பொருட்களைக் கொண்டு சேர்த்து அவர்களின் நலனில் முக்கியப் பங்காற்றி வருவதே எங்களின் முக்கிய நோக்கமாகும். இதில் பெரிய அளவில் லாப நோக்கை எதிர்பார்த்து நாங்கள் செயல்படவில்லை. மக்களுக்கு சுத்தமான உணவுப் பொருட்கள் கிடைக்கவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள், என்றார் ஐசக்.

துணியால் உருவாக்கப்பட்ட தரமான முகக் கவசங்கள்.

அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எங்களின் பங்களிப்பாக முற்றிலும் மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட முகக் கவசங்களையும், நொச்சி, அருகம்புல், மஞ்சள், வேம்பு போன்ற பல்வேறு இயற்கைக் கிருமி நாசினிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஹேன்ட்வாஷையும் தற்போது அறிமுகப்படுத்தி, மிகக் குறைந்த விலையில் வழங்கி வருகிறோம்.

Saturday, December 11, 2021

சுரண்டை அருகே உள்ள லெட்சுமி புரம் வீடு கட்டிய கடனை கொடுக்க முடியாததால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை - Farmer suicide at surandai in tirunelveli

 சுரண்டை அருகே உள்ள லெட்சுமி புரம் கிராமத்தை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது 52). விவசாய தொழிலாளி. இவர் கடன் வாங்கி வீடு கட்டினார். ஆனால் அதற்குரிய கடனை ஒழுங்காக கட்ட முடியவில்லை. இதனால் கோபாலகிருஷ்ணன் மனம் உடைந்து காணப்பட்டார். கடந்த 31-ந் தேதி கோபால கிருஷ்ணன் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடினார்.


உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாளையங்கோட்டை அழகிய மன்னர் ராஜகோபால சுவாமி கோவிலில் நந்த சப்தமியை முன்னிட்டு கோபூஜை - Gopuja at the Rajagopala Swamy Temple in Playamkottai

 

Gopuja at the Rajagopala Swamy Temple  in Playamkottai

பாளையங்கோட்டையில் அழகிய மன்னர் ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இங்கு மூலவராக வேதவல்லி, குமுதவல்லி, சமேத வேதநாராயணர் அருள்பாலிக்கிறார். மூல விமானத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத அழகிய மன்னார் மற்றும் உற்சவர் ருக்மணி, சத்யபாமா, சமேத ராஜகோபாலசாமி என 3 கோலங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.


Nandha sapathami GoPuja


இக்கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டியும், உலக மக்கள் நன்மைக்காகவும், கொரோனா தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும் நேற்று 108 கோ பூஜை நடந்தது. இதையொட்டி ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் கோ பூஜை நடந்தது. பசுவுக்கு சிறப்பு பூஜைகளை தம்பதியினர் செய்தனர்.

இதில் நாங்குநேரி மதுரகவி ராமானுஜ ஜீயர், ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் ஆகியோர் கலந்துகொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tuesday, December 7, 2021

நெல்லை கங்கைகொண்டான் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி -Death of a youth by electric-shock Near gangaikondan

 கங்கைகொண்டான் அருகே உள்ள பருத்தி குளத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 23). பொக்லைன் எந்திர டிரைவர். நேற்று முன்தினம் அந்தப்பகுதியில் உள்ள அவருடைய உறவினர் வீட்டு விஷேச நிகழ்ச்சி நடந்தது. அதற்காக வீட்டின் மாடியில் சீரியல் பல்புகள் கட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சதீஷ்குமார் மாடிக்கு சென்ற போது, எதிர்பாராதவிதமாக சீரியல் பல்புகள் மீது அவரது கைகள் பட்டுள்ளது.


இதில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே சதீஷ்குமார் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தரிடம் 39 பவுன் நகைகள் திருட்டு; CCTV காட்சி கேமராவில் பதிவாகியிருந்தது

 திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தரிடம் 39 பவுன் நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது.


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பெரியாா் நகரைச் சோ்ந்தவா் கணேசன் (76). ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியா். இவா், மனைவி முத்துகமலம், மகன் முத்துபாண்டி, மருமகள் சங்கீதா லட்சுமி மற்றும் பேத்திகளுடன் திருச்செந்தூா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு வந்தாா். அப்போது தோள் பை அணிந்திருந்தாா் கணேசன். சன்னதிகளில் தரிசனம் செய்துவிட்டு தங்க கொடிமரம் அருகே வந்த போது தோள் பை எடை குறைந்து காணப்பட்டது. அதைப் பாா்த்த போது, உள்ளே துணிப்பையில் சுற்றி வைத்திருந்த 39 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.


இது குறித்து திருச்செந்தூா் கோயில் காவல் நிலையத்தில் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் ஆய்வாளா் சுமதி வழக்குப் பதிவு செய்துள்ளாா். விசாரணையில், கோயில் மூலஸ்தானத்தில் கணேசன் சுவாமி தரிசனம் செய்த போது, மா்ம ஆசாமி ஒருவா் தோள் பையை பிளேடால் வெட்டி நகைகள் வைத்திருந்த துணிப் பை மற்றும் பணத்தை திருடிச் செல்லும் காட்சி கேமராவில் பதிவாகியிருந்தது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Monday, December 6, 2021

நல்வாழ்வு தரும் நாற்றங்கால் பண்ணை -Plants nurseries in tirunelveli

 

Plants nurseries in tirunelveli

உலகில் மரங்கள் நிறைந்த வனப்பகுதி குறைந்து வருவதால் மழைப் பொழிவு குறைந்து வருகிறது. மழைப் பொழிவு குறைவதால் நிலத்தில் நீர் வளம் குறைகிறது. பூமியில் நீர்வளம் குறைவதை உணர்ந்த அறிவியலாளர்கள், சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் மரம் வளர்க்க ஊக்கப்படுத்தி வருகின்றனர்.


Plants nurseries in tirunelveli



 பூமியின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு வன வளம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது சூழல் ஆய்வாளர்களின் கருத்து. இதையடுத்து உலகெங்கும் மரம் நடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆனால் மரக்கன்றுகள் தேவையான அளவு கிடைப்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
 இன்றைய காலத்தில் வீடுகளில் அழகு செடிகள், பூச்செடிகள் வைத்துத் தோட்டங்கள் அமைப்பதை அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் அதற்கான செடிகள் கிடைப்பது அரிதாகவே உள்ளது. எனவே, மரக்கன்றுகள் உருவாக்கும் நாற்றங்கால் பண்ணைகளின் தேவை இன்றைய காலத்தில் அதிகமாகி வருகிறது.
 நாற்றங்கால் பண்ணை அமைப்பது குறித்து திருநெல்வேலி மாவட்டம் வெள்ளங்குளியில் அமைந்துள்ள தட்டப்பாறை மத்திய நாற்றங்கால் அதிகாரி, சமூக காடுகள் திட்ட வனவர் செல்லத்துரை கூறியது: சூழல் மீது ஆர்வம், செடிவளர்ப்பு, மரம் வளர்ப்பில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் 4 பேர் ஆளுக்கு ஒரு லட்சம் முதலீடு செய்தால் 6 மாதங்களுக்குப் பிறகு மாதந்தோறும் ஆளுக்கு ரூ. 10 ஆயிரம் லாபம் பெறலாம். இதற்கு தேவை 50 சென்ட் நிலம், நல்ல தண்ணீர் வசதி, மின் வசதி கொண்ட மேடான நிலம். நாற்று வளர்ப்பதற்குத் தேவையான 5 ஷ்7 அளவிலான மக்கும் தன்மையுடைய பிளாஸ்டிக் பைகள், அதில் நிரப்புவதற்கு களிமண் கலந்த வண்டல் மண், தொழு உரம், விதை, ஊட்டச்சத்து உரம், நோய் எதிர்ப்புசக்தி மருந்து உள்ளிட்டவை.
 10 ஆயிரம் நாற்றுப் பைகள் தயாரிக்க சுமார் 5 மாதங்களுக்கு மொத்தமாக ரூ. 40 ஆயிரம் செலவாகும். அந்த வகையில் ஒரு மரக்கன்று உருவாக்க ரூ. 4 அடக்கம் ஆகும். நாற்று வளர்ந்து குறைந்தது 5 மாதங்கள் பராமரித்த பின்னர் தான் விற்பனைக்குத் தயாராகும்.
 ஒரு மரக்கன்றை ரூ.10 லிருந்து ரூ.15 வரை விலை வைத்து விற்பனை செய்தால் குறைந்தது ரூ.60 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை லாபம் கிடைக்கும். ஒரே நேரத்தில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை மரக்கன்றுகள் வளர்த்து விற்பனை செய்தால் லாபத்தின் அளவு மேலும் அதிகமாகும்.
 இன்று பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அவற்றைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் முன்ஒப்புதல் பெற்றுவிட்டால் மரக்கன்றுகள் விற்பனையை உறுதி செய்து கொள்ளலாம்.
 மேலும் வீடுகளில் அமைக்கப்படும் தோட்டங்களுக்குத் தேவையான பூச்செடிகளான ரோஜா, மல்லி, குரோட்டன்ஸ் வகைகள் உள்ளிட்ட அழகு செடிகள், விவசாயப் பயிர்களான நெல்லி, எலுமிச்சை உள்ளிட்டவற்றை வளர்த்து விற்பதன் மூலமும் அதிக லாபம் பெறலாம்.
 நாற்றங்கால் பண்ணை அமைக்கும் இடங்களில் உள்ள மக்களின் விருப்பத்திற்கேற்ற மரக்கன்றுகளைத் தேர்ந்தெடுத்து நாற்றங்கால் அமைத்து கன்று வளர்ப்பதன் மூலம் மரக்கன்றுகள் விற்பனையாகாமல் தேங்கியிருப்பதைத் தவிர்க்கலாம்.
 மீறி விற்பனையாகாமல் இருக்கும் மரக்கன்றுகளை சிறிய பையிலிருந்து பெரிய பைக்கு மாற்றிப் பராமரித்து வந்தால் அதன் வளர்ச்சிக்கேற்றவாறு அதிக விலை வைத்து விற்கலாம். அதன் மூலமும் அதிக லாபம் பெறலாம்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை: நாற்றங்கால் பண்ணை அமைப்பதற்கு மேடான நிலமாக இருந்தால் மழைக்காலத்தில் நீர் தேங்கி மரக்கன்றுகள் அழுகாமல் தவிர்க்கலாம். விதை நட்டு 15 நாள்கள் வரை காலை, மாலை தண்ணீர் தெளிக்க வேண்டும். அதற்குப் பின்னர் ஒரு வேளை தண்ணீர் தெளிக்க வேண்டும். 20 நாள்களுக்கு ஒரு முறை பையை மாற்ற வேண்டும். 30ஆவது நாள் ஊட்டச்சத்து உரமும், 15 நாள்களுக்கு ஒருமுறை நோய் எதிர்ப்பு மருந்தும் தெளிக்க வேண்டும். புங்கன், வேம்பு, பூவரசு, சிவப்பு சந்தனம், வாதாம் மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் தயாரித்தால் அதிகமாக விற்பனையாகும்.
 சவுக்கு போன்றவை மொத்தமாக ஒப்புதல் பெற்று வளர்த்து தரலாம். நாற்றுப் பைகளில் மண் நிரப்புதல், நாற்றுப் பைகளுக்குத் தண்ணீர் தெளித்துப் பராமரிப்பதற்கு பணியாளர்களை நியமிப்பதைகாட்டிலும், தாங்களே ஈடுபட்டால் அதற்கு உரிய கூலியும் நமக்கு கிடைப்பது கூடுதல் லாபமாக அமையும்.
 இயற்கை மீது நாட்டமுள்ள, செடி வளர்ப்பதில் ஆர்வமுள்ள இளைஞர்கள் நாற்றங்கால் பண்ணை தொழிலில் ஈடுபட்டால் சூழலை பாதுகாப்பதில் அவர்களின் பங்கு அளப்பரியதாக இருக்கும்.
 மேலும் நாற்றங்கால் பண்ணை அமைப்பது குறித்து விளக்கம் பெற 9786932520 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
 - கு. அழகியநம்பி


நில மோசடிக்கு போலி ஆவணம் தயாரித்து உதவிய சார் பதிவாளர் பாளையில் கைது - registrar who helped in preparing a fake document arrested in Palai

நெல்லை, டிச. 5: போலி ஆவணம் தயாரித்து நில மோசடிக்கு உடந்தையாக இருந்த கங்கைகொண்டான் சார் பதிவாளரை பாளையில் போலீசார் நேற்று கைதுசெய்தனர்.  பாளை பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி பகவதி (61). வள்ளியூரில் இவருக்கு சொந்தமான 5  ஏக்கர் 20 சென்ட் இடத்தை பவுல் வினோத் என்பவர் பகவதி போல் ஆள்மாறாட்டம் செய்ததுடன் அவரைப்போல வேறு நபரை அழைத்து சென்று போலி ஆவணம் தயாரித்து அழகேசன் என்பவருக்கு விற்பனை செய்தார்.


பின்னர் அந்த இடத்தை அழகேசன் சுப்பிரமணியன் என்பவருக்கு விற்பனை செய்தார். இந்த போலி ஆவணங்களை தயார் செய்ய பாளை ரஹ்மத்நகரை சேர்ந்தவரும், கங்கைகொண்டான் சார் பதிவாளருமான செந்தில்குமார் உடந்தையாக செயல்பட்டாராம். இதுகுறித்து தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்த பகவதி, இதுகுறித்து நெல்லை எஸ்.பி. மணிவண்ணனிடம் புகார் அளித்தார்.


 இதையடுத்து எஸ்பி பிறப்பித்த உத்தரவின் பேரில் நெல்லை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பி ஜெயபால் பர்னபாஸ், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் இதில் தொடர்புடையவர்களை தேடிவந்தனர். இந்நிலையில் சார் பதிவாளர் செந்தில்குமாரை போலீசார் பாளையில் நேற்று கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட நெல்லை வாலிபர் சிக்கினார்

 நெல்லை,டிச.6:  மாநகர பகுதியில் சாலைகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகைகள் பறித்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட வாலிபரை பாளை குற்றப்பிரிவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அவரிடம் இருந்து 7 பவுன் நகையும் மீட்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகர பகுதியான பெருமாள்புரம், ஐகிரவுண்ட் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை நோட்டமிட்டு 

பின்னால் பைக்கில் வந்து நகை பறிப்பு சம்பவம் அடிக்கடி நடந்துவந்தது. 


இதுதொடர்பாக பாளை குற்றப்பிரிவு போலீசார் நகை பறிப்பு சம்பவம் நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமிரா உதவியுடன் மர்ம நபரை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

 இதில் பேய்குளம் பகுதியை சேர்ந்த சங்கர் (21) என்ற வாலிபர் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் சங்கரை  பிடித்து நடத்திய விசாரணையில்

 அவர் பல்வேறு பகுதிகளில் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 7 பவுன் நகையை பறிமுதல் செய்து   விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sunday, December 5, 2021

மூன்றடைப்பு அருகே வெவ்வேறு விபத்துகளில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் உட்பட 2 பேர் பலியானார்கள்.

 கேபிள் டி.வி. ஆபரேட்டர்

நாங்குநேரி அருகே உள்ள வீரான்குளத்தை சேர்ந்தவர் சொக்கேஷ் (வயது 42). இவர் மூன்றடைப்பு அருகே உள்ள மலையன்குளத்தில் கேபிள் டி.வி. ஆபரேட்டராக உள்ளார். சம்பவத்தன்று மலையன்குளம் சென்று விட்டு வீரான்குளத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். 
மூன்றடைப்பு அருகே உள்ள ஆயநேரி சாலையில் வந்த போது, அந்த வழியாக வந்த வேன் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சொக்கேஷ் பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சொக்கேசை மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சொக்கேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் அங்கு பிணவறையில் குளிரூட்டப்படும் எந்திரம் பழுதானதால், அவரது உடலை நெல்ைல அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவரான பெங்களூருவைச் சேர்ந்த லூந்தன்குமார் (45) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொக்லைன் ஆபரேட்டர்
மூன்றடைப்பு மேலூர் பகுதியைச் சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் சந்தனகுமார் (40), அதே ஊரைச் சேர்ந்த விஜயபால் (40) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்றடைப்பு அருகே சென்று ெகாண்டு இருந்தனர். 
அப்போது, சாலையோரம் நின்று கொண்டு இருந்த மினி லாரி மீது  மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சந்தனகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். விஜயபால் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மூன்றடைப்பு போலீசார், படுகாயம் அடைந்த விஜயபாலை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Saturday, December 4, 2021

திருநெல்வேலி அருகே நிகழ்ந்த சோக சம்பவம்: சாலை விபத்தில் மருத்துவ மாணவிகள் உட்பட 3 பேர் பலி!

 ரெட்டியார்பட்டி அருகே, மதுரை நான்கு வழிச்சாலையில் நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரு சக்கரவாகனம் மீது மோதியது. இதில் அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த 3 மாணவிகள் தூக்கி வீசப்பட்டனர்.


திருநெல்வேலி அருகே நிகழ்ந்த சோக சம்பவம்:  சாலை விபத்தில் மருத்துவ மாணவிகள் உட்பட 3 பேர் பலி!



விபத்தில், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவிகள் திவ்ய காயத்ரி பொன்(21), பிரிடா ஏஞ்சலின் ராணி (23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், கார் ஓட்டுநர் சண்முக சுந்தரம் என்பவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் படுகாயமடைந்த மாணவி பொன் திவ்ய காயத்ரி(21) 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த நெல்லை மாநகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவக்கல்லூரி மாணவிகள் மூவர் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இரு மாணவிகள் உயிரிழந்த சம்பவம் திருநெல்வேலியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது- Unvaccinated people to be banned from entering public places

 

Unvaccinated people to be banned from entering public places in madurai.

கொரோனா தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்குச் செல்ல மதுரை மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.







நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகமானதால் ஊரடங்கு அமலானது.  பாதிப்பு குறைந்த பிறகு சிறிது சிறிதாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.   கடந்த ஜனவரி முதல் கொரோனாவை கட்டுப்படுத்த நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.   முதலில் முன்களப் பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், பிறகு 60 வயதுக்கு மேற்பட்டோர் எனத் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.

தற்போது அது மேலும் விரிவாக்கப்பட்டு 18 வயது நிறைவடைந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அரசு அனுமதி அளித்துள்ளது.   நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.   இன்னும் மக்களில் சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் உள்ளனர்.  அதையொட்டி இந்த பணிகள் மேலும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

அதன்படி மதுரை மாவட்ட ஆட்சியர் மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்குச் செல்ல தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இந்த உத்தரவின் படி ரேஷன் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள், சூப்பர் மார்க்கெட்டுகள், கடைவீதிகள், துணிக்கடைகள், வங்கிகள் உள்ளிட்ட 18 பொது இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி: ரயில் நிலையத்திலும் உஷார் ஒமிக்ரான் தொற்று பரவலை கண்காணிக்க கொரோனா பரிசோதனை கலெக்டர் விஷ்ணு தகவல்

 



திருநெல்வேலிமாவட்டத்தில் ஒமிக்ரான் தொற்று பரவலை கண்காணிக்க திருநெல்வேலிரயில் நிலையத்திலும் கொரோனா பரிசோதனை செய்ய கலெக்டர்  விஷ்ணு ஏற்பாடு செய்துள்ளார்.  திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்தும், கொல்லம் மார்க்கத்தில் இருந்தும், கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் இருந்தும்  தினசரி ரயில் சேவை உள்ளது. இந்த ரயில்கள் திருநெல்வேலிரயில் நிலையத்தை கடந்து செல்கின்றன. இது தவிர மும்பை, டெல்லி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ரயில் பயணிகள் திருநெல்வேலிரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். தற்போது கொரோனா வைரசின் அடுத்த நிலையான ஒமிக்ரான் தொற்று கர்நாடக மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.


இந்நிலையில் ரயில் மூலம் வரும் பயணிகளையும் கண்காணித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக திருநெல்வேலிசந்திப்பு ரயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி பணிகளை நேற்று கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ரயிலில் இறங்கும் பயணிகளிடம் முறையாக பரிசோதனை மற்றும் தடுப்பூசி குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் விஷ்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கொரோனாவை விட வீரியமிக்க வைரசான ஒமிக்ரான் பாதிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் இல்லை. இருப்பினும் வெளிநாட்டில் இருந்து வருவோரை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.


திருவனந்தபுரம், மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களில் இருந்து வெளிநாடுகளில் இருந்து திருநெல்வேலிமாவட்டத்திற்கு வருவோர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, சுகாதாரத்துறை துணை இயக்குநர், திருநெல்வேலி மாநகர நல அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் தனிக்குழு அமைத்து வெளிநாட்டில் இருந்து வந்தோரை கண்காணிப்பர். நெல்லை மாவட்டத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து வருவோரை கண்காணிக்க இன்டர் ஸ்டேட் எல்லைகள் நமக்கு இல்லை. எனினும் நமது முழு கவனமும் ரயில் நிலையத்தில் இருக்க வேண்டும். அதன் வழியாக மட்டுமே வெளிமாநில பயணிகள் நுழைவர். அவ்வாறு நுழையும் பயணிகளுக்கு நோய்த் தொற்று குறித்தும், தடுப்பூசி போட்ட விவரங்களும் சேகரிக்கப்படும்.


தடுப்பூசி செலுத்தியிருக்காவிட்டால் கோவாக்சின், கோவிஷீல்டு என விரும்புகிற தடுப்பூசி ரயில் நிலையத்தில் போடப்படும். ஒமிக்ரான் நோய்த் தொற்றை எதிர்கொள்ளும் வகையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கொரோனாவிற்கு அமைக்கப்பட்டுள்ள 1500 படுக்கைகளையும் 24 மணி நேரத்தில் ஒமிக்ரான் சிகிச்சைக்கு தகுந்தவாறு மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். நெல்லை மாவட்டத்தில் 3 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் இருப்பதால், ஆக்சிஜன் தடுப்பாட்டிற்கும் வாய்ப்பு இல்லை’’ என்றார்.


ஆய்வின்போது திருநெல்வேலி மாநகராட்சி சுகாதார அதிகாரி ராஜேந்திரன், தச்சை மண்டல உதவி கமிஷனர் ஐயப்பன், திருநெல்வேலி தாசில்தார் சண்முக சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.


72 சதவீதம் பேருக்கு தடுப்பூசி

திருநெல்வேலி மாவட்டத்தில் 72 சதவீதம்  பேருக்கு முதற்கட்ட கொரோனா தடுப்பூசி  போடப்பட்டுள்ளது. தடுப்பூசி குறைவாக  போட்டுள்ள மக்கள் வசிக்கும் பகுதிகள்  கண்டறியப்பட்டு, அவர்களுக்கும்  தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரிகளில் தடுப்பூசி போடாத  மாணவர்களுக்கு மெகா முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்படும் என பேட்டியின் போது கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.

Friday, December 3, 2021

Almonds can be grown at home

 


அரியானா மாநிலம் அம்பாலாவைச் சேர்ந்த சர்விந்த் தமன், தனது வீட்டு முற்றத்தில் பாதாம் செடியை வளர்த்து வருகிறார். அங்குள்ள வேளாண் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் இவர், செடி வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர்.

தனது வீட்டு தோட்டத்தில் தான் விரும்பி சாப் பிடும் பாதாமையும் விளைவிக்க விரும்பினார். பாதாம் வளர்ப்பு முறை பற்றிய கட்டுரைகளை இணையதளத்தில் தேடி படித்திருக்கிறார். வீடியோக்கள் வடிவிலும் பாதாம் வளர்ப்பு முறை பற்றி அறிந்து கொண்டவர் வீட்டில் வளர்க்க தொடங்கிவிட்டார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இவருடைய பாதாம் செடி 4 அடிக்கு மேல் வளர்ந்துள்ளது. பாதாம் செடியை எப்படி வளர்க்கலாம் என்பது பற்றி விளக்குகிறார்.

‘‘நல்ல தரமான பாதாமை தேர்ந்தெடுக்க வேண்டும். அவற்றுள் சிலவற்றை 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பூஞ்சை மற்றும் பிற தொற்றுகளால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க சிறிதளவு லவங்கப்பட்டையையும் அதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாதாம் நன்கு ஊறிய பிறகு அவற்றை டிஷ்யூ பேப்பரில் பொதிந்து காற்று புகாத டப்பாவில் அடைத்து 0-10 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.

பாதாம் முளை விட தொடங்கியவுடன் பூந்தொட்டியில் புதைத்து வைக்க வேண்டும். பூந்தொட்டியை வெறுமனே மண் கொண்டு நிரப்பாமல் களிமண், மணல், மண் புழு உரம், பசுவின் சாணம் போன்றவற்றையும் மண்ணோடு கலந்து கொள்ளலாம். மண்ணில் போதுமான அளவு ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பூச்சிகள் தொல்லை யில் இருந்து செடியை பாதுகாக்க நான் கூடுதல் முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை. அனைத்து பருவ கால நிலைகளிலும் செடி சீராக வளர்ந்து வருகிறது. பாதாமை பொறுத்தவரை நவம்பர் மாதத்திற்கு முன்பு செடி வளர்க்க தொடங்குவது சிறந்தது. மார்ச் மாதத்திற்குள் அது நன்றாக வளர தொடங்கிவிடும்.

செடி நன்றாக வளர்ந்து அதில் பாதாம் காய்த்து குலுங்குவதற்கு 3 முதல் 4 வருடங்கள் ஆகும். எனவே இந்த செடியை வளர்ப்பதற்கு அதிக பொறுமை தேவை’’ என்கிறார்.

சர்விந்த் தமன், தனது பாதாம் செடி வளர்ப்பு அனுபவங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அவரிடம் பலர் பாதாம் வளர்க்க ஆலோசனையும் கேட்கிறார்கள்.

கர்நாடகத்தில் என்ஜினீயரிங் கல்வி கட்டணம் 30 சதவீதம் உயர்வு

 542 என்ஜினீயரிங் கல்லூரிகள்


engineering College fees increased



கர்நாடகத்தில் மொத்தம் 542 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதில் 408 கல்லூரிகள் தனியாருக்கு சொந்தமானது. மேலும் 134 அரசு கல்லூரிகள் உள்ளன. இதில் பெங்களூருவில் தான் அதிகளவில் என்ஜினீயரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 156 தனியார் கல்லூரிகளும், 12 அரசு கல்லூரிகளும் என மொத்தம் 168 என்ஜினீயரிங் கல்லூரிகள் பெங்களூருவில் மட்டும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதில் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணமாக ரூ.23,810 வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக என்ஜினீயரிங் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. 

ரூ.10 ஆயிரம் உயர்வு

இந்த நிலையில் கர்நாடக அரசு தேர்வு ஆணையம், என்ஜினீயரிங் கல்வி கட்டணத்தை 30 சதவீதம் அதிரடியாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. அதாவது ஏற்கனவே இருந்த கல்வி கட்டணத்தில் ரூ.10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 
இதன்படி கர்நாடக அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கட்டணமாக ரூ.33,810-ம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கட்டணமாக ரூ.43,810-ம், முதல் தர தனியார் கல்லூரிகளில் கட்டணமாக ரூ.83,526-ம், 2-ம் தர தனியார் கல்லூரிகளில் கட்டணமாக ரூ.90,060-ம், தொலைதூர கல்லூரி மற்றும் தனியார் பலக்கலைக்கழகங்களில் கட்டணமாக ரூ.90,2943-ம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 

மாணவர்கள் அதிர்ச்சி

திடீரென்று என்ஜினீயரிங் கல்லூரி கட்டணத்தை அரசு உயர்த்தியதால் என்ஜினீயரிங் மாணவ-மாணவிகளும், பெற்றோர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவர்கள், கல்வி கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

எட்டெழுத்து பெருமாள் கோவிலில் உள்ள கோசாலையில் ஊழியராக வேலை பார்த்த பெண் மின்சாரம் தாக்கி பலி

 தாழையூத்து அருகே உள்ள கரையிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாலைத் தேவர். இவரது மனைவி சீனியம்மாள் (வயது 70).


இவர் அருகன்குளத்தில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவிலில் உள்ள கோசாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை கோவில் கோசாலையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது அங்குள்ள மின்சார சுவிட்சை தொட்டதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அப்போது கோவிலுக்கு வந்த சின்னத்துரை என்ற வாலிபர் சீனியம்மாளை காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

உடனே அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேரத்தில் சீனியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

சின்னத்துரைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

6 வசதியான பெண்களை வலையில் வீழ்த்தி மணந்த ‘கல்யாண மன்னன்’ கைது [Kalyana mannan arrested]

 

கைதான கல்யாண மன்னன் வின்சென்ட் பாஸ்கர், மோசடிக்கு உடந்தையாக இருந்த பெண்கள்
நெல்லை:

கொரோனா கால கட்டத்தை பயன்படுத்தி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடம் நகை-பணம் மோசடி செய்த கல்யாண மன்னனை நெல்லை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர் கடந்த 2 ஆண்டுகளில் 6 பெண்களிடம் சுமார் 150 பவுன் தங்க நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாயை வரதட்சணையாக பெற்று அதனை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது அம்பலமாகி உள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:-

பாளை என்.ஜி.ஓ. பி காலனி உதயா நகரை சேர்ந்தவர் கணேசன் என்ற ஜோசப்ராஜ். இவர் பாளை டக்கரம்மாள்புரம் ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக்கில் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் விஜிலா ராணி(வயது 33). இவர் பி.எட். முடித்துவிட்டு வேலை பார்த்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஜூலை 15-ந் தேதி இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தை சேர்ந்த டேனியல் என்பவரது மகன் வின்சென்ட் ராஜன் என்பவருக்கும் பெருமாள் புரத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் வைத்து திருமணம் நடந்துள்ளது. அப்போது அவருக்கு வரதட்சணையாக 40 பவுன் தங்கநகை, ரூ.3 லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாயர்புரத்தில் சில நாட்களே குடும்பம் நடத்திய நிலையில், தொழில் தொடங்க போவதாக கூறி விஜிலாராணியிடம் நகை மற்றும் பணத்தை பெற்றுக்கொண்டு சென்ற வின்சென்ட் ராஜன் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை.

அதிர்ச்சி அடைந்த விஜிலா ராணி தனது தந்தையுடன் சேர்ந்து நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் அளித்துள்ளனர். கமி‌ஷனர் செந்தாமரைகண்ணன் உத்தரவின்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சாமி தலைமையிலான போலீசார் வின்சென்ட் ராஜை தேடி கண்டுபிடித்து பாளை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி விசாரித்தபோது தான் வின்சென்ட் ராஜின் உண்மையான பெயர் வின்சென்ட் பாஸ்கர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் வெவ்வேறு பெயர்களை கூறி இதுவரை 6 பெண்களை திருமணம் செய்ததும், அதன்மூலம் கிடைத்த வரதட்சணையை வைத்து கொண்டு சொகுசாக வாழ்ந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் திசையன் விளையை சேர்ந்த ஒரு புரோக்கர் மூலமாக விஜிலாராணியை 6-வதாக திருமணம் செய்ததும், இதற்காக சித்தியாகவும், தாயாகவும் 2 பெண்களை நடிக்க வைத்ததும் தெரிய வந்தது.

விஜிலாராணியின் தந்தை கணேசன், தனது மகளுக்கு நல்ல மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற ஆசையில் பாளையில் உள்ள ஒரு திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து வைத்திருந்துள்ளார். இதனை அறிந்த வின்சென்ட், திசையன்விளை சுவிஷேச புரம் வடக்கு தெருவை சேர்ந்த இன்பராஜ் என்ற திருமண புரோக்கரிடம் பேசி உள்ளார். அப்போது, விஜிலா ராணியை தனக்கு திருமணம் செய்து வைத்தால், அதில் கிடைக்கும் வரதட்சணை தொகையை 2 பேரும் சமமாக பங்கிட்டு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். அவரும் பணத்திற்கு ஆசைப்பட்டு கணேசனை தொடர்பு கொண்டு இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

இந்த திருமணத்திற்காக சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரை சேர்ந்த பிளாரன்ஸ் (58) என்ற பெண்ணை தனக்கு தாயாகவும், திசையன்விளை ஜேம்ஸ் தெற்கு தெருவை சேர்ந்த தாமரை செல்வி(56) என்ற பெண்ணை தனக்கு சித்தியாகவும் நடிக்க வைத்துள்ளார்.

வின்சென்ட் பாஸ்கர் சாயர்புரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை முதலாவதாக திருமணம் செய்துள்ளார். பின்னர் பணகுடி அருகே உள்ள பாம்பன்குளத்தை சேர்ந்த பெண்ணை 2-வதாகவும், களக்காடு டோனாவூரில் 3-வது திருமணமும் செய்துள்ளார்.

களக்காடு கீழகாடு வெட்டியை சேர்ந்த பெண்ணை 4-வதாகவும், தூத்துக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணை 5-வது திருமணம் செய்த வின்சென்ட் ராஜ், கடைசியாக பாளையை சேர்ந்த விஜிலா ராணியை திருமணம் முடித்துள்ளார். 7-வதாக ஒரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வின்சென்ட் ராஜ், இதுவரை திருமணம் முடித்த பெண்கள் அனைவருமே வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். அந்தந்த பகுதியில் உள்ள திருமண புரோக்கர்களை பணம் தருவதாக ஆசை காட்டி இதுவரை கைவரிசை காட்டி வந்துள்ளார்.

ஒவ்வொரு பெண்களுடனும் சுமார் 3 மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தும் வின்சென்ட் ராஜ் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து ஆடம்பரமாகவும், சொகுசாகவும் வாழ்ந்துள்ளார். இதனால் அவரை நம்பிய பெண்களிடம் தனக்கு வியாபாரம் செய்வதற்கு பணம் வேண்டும் என்று கூறி நகை-பணத்தை அபகரித்து சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்ட மற்ற பெண்களிடம் இருந்து எந்த புகார்களும் வரவில்லை என்றாலும், அவர்களிடம் இருந்தும் இதுவரை சுமார் 150 பவுன் தங்க நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாயை வின்சென்ட் ராஜ் அபகரித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையே விஜிலா ராணியை திருமணம் செய்ய உதவி செய்த புரோக்கர் இன்பராஜ், தலைமறைவாகிவிட்டார். அவரை தனிப்படையினர் தேடி வருகின்றனர். வின்சென்ட் பாஸ்கர் மேலும் பல பெண்களையும் தனது வலையில் வீழ்த்தி இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இது தொடர்பாக அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இன்னும் ஓரிரு நாளில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உரிய முறையில் அனுமதி பெற்று அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

Thursday, December 2, 2021

செம்பு பாத்திரத்தை (Copper vessel) பயன்படுத்தினால் கிடைக்கும் 7 பலன்கள்

 

ஆயுர்வேதத்தில் கூறப்படும், ஒரு மனித உடலில் உள்ள திரிதோஷங்கள் எனப்படும் கபம், பித்தம் மற்றும் வாதம் சமநிலையில் இருக்கவும், தொற்று நோய்களை தடுப்பதற்கும்  செம்பு பாத்திரங்களில் சேமிக்கப்பட்ட தண்ணீரை வெறுமனே குடித்தால் மிகவும் நல்லது.

பொதுவாக  கோடைக் காலத்தில் தண்ணீரை சேமித்து வைக்க மண் பானைகளை  பயன்படுத்துவோம். அதேபோல, குளிர்காலம் தொடங்கியவுடன் செம்பு பாத்திரங்களில் மாற்றம் செய்ய வேண்டும். இது மற்ற பாத்திரங்களில் சேமிக்கப்படும் தண்ணீரை விட சுவையாகவும், இனிமையாகவும் இருக்கும். அதனால், அந்த தண்ணீரை பருகிய  நபரை லேசாக மற்றும் புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும்.  

இப்படி செம்பு பாத்திரத்தில் வைக்கப்படும் நீர் சிறிது சூடாகவும் இனிமையாகவும் சிறிது காரமாகவும் இருக்கும். அது செரிமானத்திற்குப் பிறகு கடுமையான சுவை மாற்றத்திற்கு உட்படுகிறது.

செம்பு பாத்திரத்தை பயன்படுத்தினால் கிடைக்கும் 7 பலன்கள்:-  

1. செரிமான அமைப்பை மேம்படுத்துதல்

2. உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது

3. எடை குறைக்க உதவுகிறது

4. கீல்வாதம் , வீக்கமடைந்த மூட்டுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறது.  

5. இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு உதவுவதன் மூலம் இரத்த சோகையை வெல்ல உதவும்.

6. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது

7. இது ஆண்டிமைக்ரோபியல் மற்றும் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது

அதுமட்டுமல்லாமல்,  புகை மூட்டத்தின் போது உங்கள் கண்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது .  

World AIDS day awareness program nellai collector participated

 



திருநெல்வேலி மாவட்டத்தில் 2007 ஆண்டில் 1.8% சதவிதமாக இருந்த பாதிப்பு பலதுறைகளின் ஒத்துழைப்பால் 2020 ஆண்டு 0.07% ஆக குறைந்தது. இந்த ஆண்டில் 0.06% ஆக குறைந்துள்ளது. எனவே இனி வருங்காலங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் அனைவருடைய ஒத்துழைப்பு மற்றும் பல துறைகளின் செயல்பாடுகளால் எச்.ஐ.வியால் எந்த ஒரு நபரோ, குடும்பமோ அல்லது குழந்தைகளே பாதிக்கப்படக் கூடாது என்ற உறுதியுடன் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு பேசினார்.

முன்னதாக உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு வாசிக்க அனைத்துதுறை அலுவலர்கள், பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர். பின்னர் எச்.ஐ.வி/ எய்ட்ஸ் தடுப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் சிறப்பாக பணியாற்றிய 50 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.கிருஷ்ணலீலா, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரவிசந்திரன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி தலைமை மருத்துவர் மணிமாலா, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுண்ணுபிரியல் துறை தலைவர் மரு.பூங்கொடி, டான்சாக்ஸ் திட்ட அலுவலர் ஜெகதீசன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நோடல் அலுவலர் மரு. அமுதா, மாவட்ட மேற்பார்வையாளர் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு அலகு ஜெயகுமார், மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர் மழை காரணமாக நெல்லை டவுனில் குளம் போல் மாறிய சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.(Roads that have become like ponds in Nellai Town)

 


திருநெல்வேலி: சரவணா ஸ்டோர்ஸ் ஜவுளி கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

வரி ஏய்ப்பு தொடர்பாக நெல்லையில் உள்ள சரவணா செல்வரத்தினம் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை.




தமிழகம் முழுவதும் சரவணா ஸ்டோர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இன்று காலையிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நெல்லையில் வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள சரவணா செல்வரத்தினம் ஜவுளி கடையில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையால் ஜவுளிக்கடைகள் தங்க நகை கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பல சரக்கு விற்பனை செய்யும் அனைத்தும் விற்பனையை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

Wednesday, December 1, 2021

பெங்களூரில் கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் 30 வயதுக்கு மேல் உள்ள 29 ஆயிரம் பெண்களுக்கு பிடித்த மாப்பிள்ளை கிடைக்காததால் கல்யாணம் ஆகவில்லை

 


பள்ளி கட்டணம் கட்டாமல் TC வாங்கினால் இனி சிக்கல்.. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு !

 கல்விக் கட்டணம் செலுத்தாமல் வாங்கிச் செல்லும் மாற்றுச் சான்றிதழ்களில் "கல்விக் கட்டணம் பாக்கி" என முத்திரை குத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் முழுக் கல்விக் கட்டணத்தையும் செலுத்திவிட்டால் புதிய மாற்றுச் சான்றிதழ் வழங்கலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற அறிவிப்பால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியும், கவலையும் ஏற்பட்டுள்ளது.

 கொரோனாவால் பாதிப்பு 

பெற்றோர், மாணவர்கள் பாதிப்பு

2020ம் ஆண்டு தொடங்கிய கொரோனா பாதிப்பால் பலர் வேலையிழந்தனர். பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தனர். இதனால் பல பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் பல பெற்றோர்கள் தனியார் பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கிக்கொண்டு அரசுப் பள்ளிகளில் சேர்த்தனர். பல தனியார் பள்ளிகளில் ஏற்கனவே இருந்த கல்வி கட்டண பாக்கியை செலுத்தாமல் மாற்றுச் சான்றிதழ் வழங்க முடியாது என கூறியதால் பெற்றோர்கள் கவலை அடைந்தனர். இதனால் பள்ளியில் இருந்து விடுபட முடியாமலும், அரசுப் பள்ளியில் சேர்க்க முடியாமலும், கல்வியை அதே பள்ளியில் தொடரமுடியாமலும் தவித்தனர்.


 டி.சி. இல்லாமல் சேர்க்கலாம் 

பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

இது தொடர்பான பிரச்சனை தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கவனத்திற்கு சென்றது. இதற்கு விளக்கம் அளித்த கல்வித்துறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வேலையையும், பொருளாதாரத்தையும் இழந்து பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை கட்டணம் குறைவாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கோ அல்லது அரசுப் பள்ளிகளுக்கோ மாற்றுகின்றனர். எனவே பழைய பள்ளியில் இருந்து வரும் மாணவர்கள் டி.சி. வாங்கி வரவில்லை என்றாலும் அவர்களை சேர்த்துக்கொள்ள பள்ளி நிர்வாகங்கள் முன்வரவேண்டும் என தெரிவித்திருந்தது.


வழக்கு

இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தங்கள் தரப்பில் வாதாடிய தனியார் பள்ளிகள் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை நம்பித்தான் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளும், செலவினங்களும் உள்ளது. மாணவர்கள் கல்விக் கட்டணத்தை முழுமையாக செலுத்தாவிடில், நிர்வாகம் பெரிதும் பாதிக்கப்படும் என தெரிவித்தனர். அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை என அறிவிப்பதால், எந்தெந்த மாணவர்கள் படிப்பை தொடர்கின்றனர், எந்த பள்ளியில் சேர்கின்றனர் என்ற விவரங்கள் தெரியாமல் போகும் என்றும், இதனால் பள்ளிகளின் நிர்வாகம்தான் பாதிக்கப்படும் என வாதிடப்பட்டது. மேலும் கட்டணம் வசூலிக்காமல் மாற்றுச் சான்றிதழ் வழங்கிவிட்டால் பின்னர் வசூலிப்பது கடினம் என்றும் எனவே திரும்ப பணத்தை செலுத்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.சங்கரன் கோரிக்கை விடுத்தார்.


டி.சி.யில் கட்டண பாக்கி என முத்திரை

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி முழுக் கல்விக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு உரிய மாற்றுச் சான்றிதழை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார் அதே சமயம் கட்டண பாக்கி வைத்துள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் டி.சி.யில் 'கட்டண பாக்கி உள்ளது' (Fees Pending) என குறிப்பிடலாம் எனவும் அனுமதி அளித்துள்ளார். மேலும் மாணவர்களுக்கான இ.எம்.ஐ.எஸ். இணைய தளத்தில் தேவையான திருத்தங்களை 2 வாரத்தில் மேற்கொள்ள வேண்டுமெனவும் உத்தரவிட்டு தனியார் பள்ளிகளின் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்தார்.

ஆன்லைனில் இலவசமாக தமிழ் கல்வி.. பெங்களூர் தமிழ் அறக்கட்டளை ஏற்பாடு..

 பெங்களூர் தமிழ் அறக்கட்டளை நடத்தும், ஆன்லைன் அடிப்படை தமிழ் கற்றல் வகுப்பு படி நிலை-1, டிசம்பர் மாதம் 1ம் தேதி துவங்குகிறது.தமிழ் அறக்கட்டளை-பெங்களூர், உலகெங்கிலும் உள்ள தொலைதூரத் தமிழர்களுக்குப் பயனளிக்கும் வகையில், நன்கு வடிவமைக்கப்பட்ட ஆன்லைன் முறை மூலம் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.வெறும் 30 நாட்களில் அடிப்படை தமிழ் அறிவை வழங்கும் நோக்குடன், இந்தாண்டு மே 1ம் தேதி ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது.

 இது தமிழ் அறிஞர் பொள்ளாச்சி நேசனால் கட்டமைக்கப்பட்ட பாட திட்டமாகும்.இந்த நிலையில், 2021ம் ஆண்டு டிசம்பர் 1 முதல் 30 வரை அடிப்படை தமிழ் கற்றல் வகுப்பு-நிலை-1 தொடங்க உள்ளது. இது 8வது பேட்ஜ் ஆகும். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 கல்வியின் சிறப்பம்சங்கள் இவைதான்:

• தமிழறிஞர் பொள்ளாச்சி நாசன் வடிவமைத்த பாடத்திட்டம்

• வகுப்பு ஜூம் ஆப் மூலம் நடைபெறும்.

• வகுப்பு நேரம்: தினமும் மாலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை• சனி, ஞாயிறு விடுமுறை

• பயிற்றுவிக்கும் மொழி தமில்.

• கற்றலுடன் சுவாரஸ்யமான கதைகள் மற்றும் பயனுள்ள பாடல்கள்

• தமிழ் எழுத படிக்கத் தெரியாதவர்களுக்கு முன்னுரிமை

• பாட வகுப்புக்கு கட்டணம் கிடையாது, முற்றிலும் இலவசம்.

• முதல் 100 விண்ணப்பதாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்

.• தன்னார்வ நன்கொடைகளை தமிழ் அறக்கட்டளை ஏற்றுக்கொள்ளும். வங்கி மூலம் பணம் செலுத்த விரும்புவோர் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

• சேர்க்கை 30.11.2021க்கு முடிவடைகிறது.

•முதலில் வருபவருக்கு முதலில் அனுமதி

• வினவலுக்கும் தொடர்பு கொள்ளவும்:

தமிழ் அறக்கட்டளை, 

பெங்களூரு 

எஸ்.குமணராசன், தலைவர்

ஏ.தனஞ்செயன், செயலாளர்

முத்துமணி நன்னன், பொருளாளர்
மொபைல்: 9483755974, 6363118988, 9820281623
• மின்னஞ்சல்: tamilfoundationblr@gmail.com
• பதிவு செய்ய, கிளிக் செய்யவும்: https://forms.gle/VBpoNdVL1ZQnUxtD9