வேண்டும் ரயில்வே தொழிற்சாலை!
2006ல் நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க 2600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பிறகு அந்தப் பணி கிடப்பில் போடப்பட்டது. அந்த இடத்தில் ரயில்வேக்கான சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ரயில்வே துறையில் அதிக வேலைவாய்ப்பு தரும் தொழிற்சாலைகள் அனைத்தும் வட இந்தியாவிலேயே உள்ளன.
திருச்சி, பொன்மலை தொழிற்சாலையை விரிவுபடுத்தி ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையாக மாற்ற வேண்டும் என்று 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் பயனில்லை. இதைப்போல் தென்னக ரயில்வேக்கு உட்பட்ட பாலக்காட்டில் புதிய ரயில் பெட்டித் தொழிற்சாலை அமைக்கப்படும் என 2008 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்த முடியாத காரணத்தால் அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நாங்குனேரியில் ஏற்கனவே 2600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் ரயில் எஞ்சின் தொழிற்சாலை அமைக்க வேண்டும். இந்திய ரயில்வேக்கு 2020ம் ஆண்டுக்குள் சுமார் 5334 டீசல் எஞ்சின்களும், 4281 மின்சார எஞ்சின்களும், 50,880 ரயில் பெட்டிகளும் தேவைபடுகிறது. இதற்கென 1,20,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று ரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வாய்ப்பு இங்கு வர அரசியல் கட்சியினர் குரல் கொடுக்க வேண்டும்’’