Thursday, December 3, 2015

2016 Election Manifesto -Tirunelveli District expectation

1.Tirunelveli Railway Division by bifurcating Madurai and Trivandram divisions.
2.Electric Loco Manufacturing Unit at Nanguneri.
3.MEMU shed at Nellai
4.Madurai to Tenkasi Ring Road
5.Nellai-Kollam 4 way
6.Sethu Project
7.Uvari Fisihing Harbour
8.Courtallam should be as Indian Tourism Map.
9.Utilisation of Gangaikondan-Nanguneri SEZ
10.UGD works throughout the city
11. Beautification Of Thamirabarani like Ganges.
12.Theme park at Ilanthaikulam
13.Extend the City Limit
14.Modernisation of Junction Bus Station
15.Ramayanpatti Omni Bus Station
16.Kulavanigarpuram,Meenakshipuram ROB
17.Thamirabarani River Bridge adjacent to sulochana Mudhaliyar Bridge
18.Thamirabarani-Karumeniyaru-Nambiyaru Water Linking Project
19.Tirunelveli city in JNNURM
20.Floating Hotel at Nainarkulam Lake
21.New Airport at Tirunelveli
22.New Link Roads throughout the city
23.Papanasam-Trivandaram Mountain Way
24.Papanasam water Project
25.Tirunelveli Medical College Hospital should be converted into Multispecialty Hospital
26.Regional Passport Centre at Tirunelveli
27.New BG line to Sankarankovil via Alangulam
28.Madurai-Kanyakumari Double Track
29.Senkottai-Punalur Guage Conversion
30.New Bridges inside the city
31.Reopen Cooperative spinning mill in Pettai.

Modi's reply to the question of Tirunelveli student

புதுடெல்லி: உண்மையான ஆசிரியர்களுக்கு ஓய்வு கிடையாது என்றும், ஆசிரியர் பணி மகத்தானது என்றும் டெல்லி ஆசிரியர் தினவிழாவில் பிரதமர் மோடி கூறினார்.

விழாவில் தொடர்ந்து,  வீடியோ கான்பரன்சிங் மூலம் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்திய மோடி, திருநெல்வேலி மாணவி விசாலினி கேட்ட கேள்விக்கு  பதில் அளித்தார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் ராதாகிருஷ்ணனின் உருவம் பதிக்கப்பட்ட நினைவு நாணயத்தையும், மாணவர்களின் திறமையை வளர்க்கும் 'கலா உற்சவம்' என்ற இணையதளத்தையும் தொடங்கி வைத்த பிரதமர் மோடி'  600 ஆசிரியர்கள் , 800 மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

பல்வேறு மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமரிடம் கேள்வி கேட்டு பதில் பெற்றனர்.

வெற்றி பெற்ற அரசியல்வாதியாக திகழ நமக்கு என்ன தகுதி வேண்டும் ?

தலைமை பொறுப்பை நாம் ஏற்க, நம்மை தலைசிறந்தவர்களாக்கி கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் குறித்த கருத்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் சேவை செய்ய வருவோர் குறித்து மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவது கவலை அளிக்கிறது. மக்கள் பாதிக்கப்படும்போது சிறந்த முடிவுகள் எடுக்கும் தலைமை பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாட்டில் உள்ள அனைத்துப்  பள்ளிகளிலும் படிக்கும் நபர்கள் அரசியலுக்கு வர வேண்டும். மக்கள் அச்சப்படுகின்றனர். நான் நூலகம் சென்ற போது அதிகம் விவேகானந்தர் புத்தகத்தை படிப்பேன் அது என்னிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது ?

நான் படித்த பள்ளி ஒரு சிறிய கிராமத்தில் இருந்தது. இதனால் எனக்கு அங்கு நவீன விளையாட்டு ஏதுமில்லை. அரசியல்வாதி விளையாட்டை நாம் எல்லோரும் தெரிந்து வைத்துள்ளோம்.

ஸ்வச் பாரத் மிஷன் திட்டம் பெரும் சவால்களைச்  சந்தித்துள்ளதா ?

சுகாதாரத்தைப்  பாதுகாப்பதில் இந்தத்  திட்டத்திற்கு  திடக்கழிவு மேலாண்மை பெரும் சவாலாக உள்ளது . இந்தத்  திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு மீடியாக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உதவுகின்றன.

தொடர்ந்து திருநெல்வேலி  மாணவி விசாலினி,

நான் நாட்டிற்காக சேவை செய்ய விரும்புகிறேன். அதற்கு சிறந்த வழி எது ?

நாட்டுக்கு சேவை செய்ய ராணுவத்தில் சேர வேண்டும், அரசியலுக்கு வரவேண்டும் என்பதில்லை. சிறிய, சிறிய வழியில் பணியாற்ற முடியும். சிறு, சிறு பங்களிப்பு மூலம நாட்டிற்கு சேவையாற்ற முடியும். மின்சாரம் , பெட்ரோல், உணவு சேமிப்பு, தண்ணீர் சிக்கனம் கடைபிடிக்க வேண்டும். இதுவே ஒரு சேவைதான்" என மோடி பதிலளித்தார்.

Friday, October 23, 2015

2 thousand saplings were planted in single-day by 200 rural women

திருநெல்வேலி : நெல்லையில் சீமைக்கருவேலி மரங்களை அகற்றிவிட்டு ஒரே நேரத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை கிராமப்புற பெண்கள் முன்னின்று நடத்தினர்.

தமிழகம் முழுவதும் நீர்க்கருவை எனப்படும் சீமைக்கருவேலி மரங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழக அரசும் அரசும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஆணைவெளியிட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக தற்போது வடகிழக்குபருவமழை துவங்கும் இக்காலகட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியும் புதிய மரக்கன்றுகள் நடும்திட்டமும் பரவலாக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களை கொண்டு தற்போது கிராமப்புறங்களுக்கு பயனுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.


நெல்லையை அடுத்துள்ள ரெட்டியார்பட்டி கிராமத்தில் குளத்துப்பகுதியில் சுமார் 7.44 ஏக்கர் பரப்பில் முளைத்திருந்த வேலிக்கருவை மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. இதில் நீர்ப்பிடிப்பு பகுதி போக மீதமுள்ள 5 ஏக்கர் நிலப்பரப்பில் முழுமையாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை ஒரே நாளில் நடும் திட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் விஜயகுமார் இந்த பணிகளை துவக்கிவைத்தார். இந்த திட்டத்தை பெண்களே முன்னின்று நடத்தினர். இந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவியான அருணாமுரளிதரன் முன்னிலையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்டபெண்கள் தங்கள் கிராமத்தின் வளர்ச்சிதிட்டமாகவும், பசுமைதிட்டமாகவும் இதனை மேற்கொண்டனர்.இதில் பலா, வேம்பு, மா என பலன்தரும் மரங்கள் நடப்பட்டன. வட்டார வளர்ச்சி அலுவலகர்கள் பிரான்சிஸ் மகராஜன், முத்துக்குமாரசாமி, யூனியன் சேர்மன் சொர்ணரமா தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னோடி திட்டமாக இதனை செயல்படுத்துவதன் மூலம் ஒரு கிராமமே பசுமையாக மாறும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

Tuesday, August 11, 2015

Tirunelveli city police stations phone numbers

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையத்தின் போன் நம்பர் ...
-------------------------------------------------------------------------------------------------


TIRUNELVELI – POLICE STATIONS
TIRUNELVELI CITY PHONE NUMBERS
Tirunelveli 0462-23227470
Palayamkottai 0462-2530711
POLICE STATIONS PHONE NUMBERS
Melapalayam 0462-2352530
Palayamkottai 0462-2561292
Perumalpuram 0462-2530175
Pettai 0462-2342006
Thatchanallur 0462-2334893
Tirunelveli Town 0462-2339273
Tirunelveli Bridge 0462-2334629
THIRUNELVELI – DISTRICT PHONE NUMBERS
Tirunelveli Rural 0462-2301700
Ambasamudram 04634-250400
Alangulam 04633-270110
Tenkasi 04633-225055
Sankaran Koil 04636-222111
Valliyur 04637-220283
Nanguneri 04635-250287
POLICE STATIONS PHONE NUMBERS
Achanpudur 04633-505152
Alangulam 04633-270140
Alwarkuruchi 04634-283250
Ambasamudram 04634-250346
Ayikudi 04633-267153
Cheranmahadevi 04634-260125
Chinnakovilankulam 04636-284422
Courtalam 04633-222137
Eruwadi 04637-240134
Gangaikondan 0462-2486144
K.V Nallur 04636-260148
Kadayam 04634-240432
Kadayanallur 04633-240505
Kalakad 04635-260530
Kallidaikurichi 04634-250404
Kuruvikulam 04632-251940
Koodankulam 04637-250150
Mansolai 04634-220484
Manur 0462-2485122
Moolakaraipatti 04635-258156
Moonradaippu 04635-257505
Mukkudal 04634-274558
Muneerpallam 0462-2352405
Nanguneri 04635-250112
Ovari 04637-277126
Pazhavoor 04637-288527
Panagudi 04637-245144
Panavadalichatram 04636-270135
Pappakudi 04634-274550
Thiruvonam 04372-241450
Pathamadai 04634-260165
Pavoorchatram 04633-250244
Puliyankudi 04636-233035
Puliyarai 04633-285132
Radhapuram 04637-254124
Sampavourvadakarai 04633-261910
Sankarankoil 04636-222267
Sankarankoil Town 04636-226267
Senthamaram 04633-245140
Shenkottai 04633-233274
Sivagiri 04636-250224
Sivalaperi 0462-2483116
Sivanthipatti 0462-2532700
Suthamalli 04634-242625
Surandai 04633-261110
Thalayuthu 0462-2300264
Tenkasi 04633-222278
Theverkulam 0462-2486135
Thirukkarankudi 04635-265036
Thiruvengadam 04636-264131
Thisayanvilai 04637-271366
Tirunelveli Taluk 0462-2541520
Uthumalai 04633-505140
Valliyur 04637-220256
Vasudevanallur 04636-241337
Veerakeralampudur 04633-277125
Veeravanallur 04634-287240
Vicramasingapuram 04634-220330
Vijayanarayanam 04635-255148

Thursday, August 6, 2015

சுற்றுலா தளங்கள் - திருநெல்வேலி

திருநெல்வேலியை 'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், 'தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், 'பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும். திருநெல்வேலி பெயர்க் காரணம் இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி எனப்படுகிறது என்ற கருத்து உள்ளது.
திருநெல்வேலி என்றவுடன் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது 'திருநெல்வேலி அல்வா'தான். இந்த ஊரின் அல்வாவின் சுவையே தனிதான். அதிலும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவிற்கு இருக்கும் ருசியே தனிதான். திருநெல்வேலிக்கு வருபவர்கள் அல்வா வாங்காமல் திரும்ப மாட்டார்கள் என்பது தனிச் சிறப்பு. திருநெல்வேலியை நெல்லை என்றும் அழைப்பர்.

அம்பாசமுத்திரம்

கோயில்கள் நிறைந்த ஊர். காசி விஸ்வநாதர் கோயில், திருமூநாந்தசாமி கோயில், அம்மையப்பர் கோயில், கிருஷ்ணர் கோயில், புருசோத்தம பெருமாள் கோயில், லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் என்று நிறையக் கோயில்கள் இங்கு உள்ளன.

ஆத்தங்கரை பள்ளிவாசல்

நெல்லையிலிருந்து 46 கி.மீ. தொலைவில் இந்தப் பள்ளிவாசல் உள்ளது. இங்கு சையத் அலி பாத்திமா மற்றும் ஷேக் முகமது இருவருக்கும் இரண்டு கோபுரக் கூடுகள் உள்ளன. இவர்கள் இருவரும் சூஃபி ஞானிகள், அனைத்து மதத்தினரும் வந்து வழிபடும் இடம் இது.

அய்யனார் சுனை

நாட்டார் தெய்வமான அய்யனார் கோயிலோடு இயற்கையான சுனையும் அமைந்த இடம். அருகில் சந்தனக்காடும் உள்ளது. பார்க்கச் சிறந்த இடம்.

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்

நெல்லையிலிருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ளது. டிசம்பர் மாதக் கடைசியில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்கும். சுமார் 35 வகைப் பறவைகள் இவ்வாறு வலசை வந்து ஜூன் ஜூலை மாதம் வரை தங்கி குஞ்சு பொரித்து பிறகு அவற்றுடன் பறந்து செல்கின்றன. மிக முக்கியமான பறவைகள் சரணாலயமாக இது இருந்து வருகிறது.

குற்றாலம்

பெயரைச் சொல்லும் போதே உற்சாகம் பிறக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அருவிகள் நிறைந்த பகுதி. திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் ஏற்பட்டது.

குற்றால அருவிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.

குற்றாலத்தின் பெரிய அருவி தவிர சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி, பழத்தோட்ட அருவி, புது அருவி என ஏராளமான அருவிகள் உள்ளன. எல்லா அருவிகளுக்கும் சென்று வர போக்குவரத்து வசதி உள்ளது. இந்த அருவிகளில் வரும் தண்ணீரில் மூலிகைக் குணம் கலந்திருப்பதால் இவற்றில் நீராடுபவர்களுக்கு எல்லா நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

குற்றாலநாதர் கோயில்

பெரிய அருவியின் பக்கத்தில் கோயில் கொண்டுள்ளார் குற்றாலநாதர். திரிகூட ராசப்ப கவிராயர் பாடிய குற்றாலக் குறவஞ்சியின் நாயகன் இவர்தான். தொலைபேசி - 04633-210138.

மாவட்ட அறிவியல் மையம்

தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள நாட்டின் மிக முக்கியமான அறிவியல் மையங்களில் இதுவும் ஒன்று. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையுடன் இணைந்த தேசிய அறிவியல் காட்சி சாலைகள் கழகத்தின ஒரு பிரிவு இது. இந்தியாவில் உள்ள 124 அறிவியல் மையங்களில் இதுவும் ஒன்று. இங்கு கடல் பற்றிய மூன்று நிரந்தரக் காட்சி சாலைகள், 6 ஏக்கரில் அறிவியல் பூங்கா ஆகியவை அமைந்துள்ளன. மேலும் நடமாடும் அறிவியல் பொருட்காட்சி, கோளரங்கம் தற்காலிக அறிவியல் மற்றும் நாடகக் காட்சி வசதிகளும் உள்ளன.

களக்காடு வனவிலங்கு சரணாலயம்

நெல்லையிலிருந்து 47 கி.மீ. தொலையில் உள்ள விலங்குகள் சரணாலயம் . அடிப்படையில் இது புலிகளுக்கான சரணாலயம் எனினும் சிங்கவால் மற்றும் நீளவால் குரங்குகளும் இங்கு உண்டு. வனத்துறையிடம் அனுமதி பெற்று வாகனத்தில் பயணம் செய்யலாம். செங்கால் தேரி வன ஓய்வகத்தில் உணவு உறைவிட வசதி கிடைக்கும். செப்டம்பர் முதல் மார்ச் வரை இங்கு செல்லலாம்.

கிருஷ்ணாபுரம்

நெல்லையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள பெருமாள் கோயில் இது. இக்கோயிலின் ஆளுயர சிற்பங்கள் பிரமிப்பூட்டுபவை.

மாஞ்சோலை

நெல்லையிலிருந்து 57 கி.மீ தூரத்தில் 1162 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களின் பகுதிதான் மாஞ்சோலை. இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் 4000 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.

குறுக்குத்துறை முருகன் கோயில்

தாமிரபரணி ஆற்றிலிருந்து கிளம்பும் பனிமுட்டம் தழுவ, முருகன் கோயில் கொண்டிருக்கும் திருஉருவ மலை. இந்தப் பாறையில் இருந்துதான் 1653 ஆம் ஆண்டு திருச்செந்தூர் முருகன் சிலை வடிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

நாங்குநரி

நெல்லையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள அழகான ஊர். சுற்றிலும் வயல்களும் பெரிய குளமும் பசுமையான காட்சிகள். இஸ்லாமியர்களும் இந்துக்களும் பேதமின்றி கூடிவாழும் அழகிய ஊர்.

மணிமுத்தாறு அணை

நெல்லையிலிருந்து 47 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த அணைக்கட்டு. இங்கிருந்து 5 கி.மீ தூரத்தில் மணிமுத்தாறு அருவி இருக்கிறது. அணைக்கட்டில் இருந்து 10 கி.மீ. தூரத்தில்தான் மாஞ்சோலை எஸ்டேட் இருக்கிறது.

கழுகுமலை

சமண மதத்தின் மிக முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று. சமணர்களின் சிற்பக் கலைத்திறனுக்குச் சிறந்த உதாரணம் இங்குள்ள கோயில்தான். சிவபெருமானுக்கென்று கட்டப்பட்ட குடைவரைக் கோயிலான வெட்டுவான் கோயிலும் இந்தக் கழுகுமலையில்தான் உள்ளது.

முருகன் கோயில்

முருகனுக்கு இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்று நகரின் இதயப் பகுதியிலும் இன்னொன்று தாமிரபரணி நதியின் தீவுப்புறத்தில் உள்ள பாறைக் கோயிலும் ஆகும்.

அருங்காட்சியகம்

நெல்லையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாளையங்கோட்டையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இது ஒரு பல்நோக்கு தொல்லியல் அருங்காட்சியகமாகும். அனுமதி இலவசம்.

பாபநாசம்

பாவங்கள் அனைத்தையும் நாசம் செய்யும் இடம் என்பதால் இது பாபநாசம் என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலையில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது. அகத்தியருக்கு இங்கு கோயில் உள்ளது. சிவனும் பார்வதியும் அகத்தியருக்கு நேரில் காட்சி தந்த இடம் இதுதான் என்றும் கூறப்படுகிறது. பாபநாசம் நீர்வீழ்ச்சி இதன் அருகில்தான் உள்ளது. நெல்லையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ளது.

நம்பி மலை

ஒரு குன்று. அதைச் சுற்றி அழகிய கிராமம். இந்தக் குன்றில் நம்பியாண்டவர் குடி கொண்டுள்ளார். மலை நம்பி என்றும் இவரை அழைக்கிறார்கள். குன்றிலிருந்து கிராமத்தின் முழு அழகையும் ரசிக்கலாம்.

பத்தமடை

மென்மையான கைக்குள் சுருட்டும் அளவு நேர்த்தியான கோரைப்பாய்களுக்கு பெயர் பெற்ற ஊர். நீரோடைக் கரைகளில் நீண்டு வளரும் கோரைகளால் இந்தப் பாய் பின்னப்படுகிறது. சுவாமி சிவானந்தா இந்த ஊரில்தான் பிறந்தார்.

சாலைக் குமரன் கோயில்

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள இந்தக் கோயில் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது என்பதற்காக 1965 இல் வெற்றி விருது பெற்றது.

கும்பருட்டி அருவி

குற்றாலத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் மேற்கு மலைத் தொடரில் இருக்கும் அருவி. இந்த அருவியை ஒட்டி நீந்துவதற்கு வசதியாகக் குளமும் உள்ளது.

பொட்டல் புதூர் தர்கா

1674 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மிகப் பழமையான தர்கா. இந்தத் தர்காவின் கட்டட அமைப்பு இந்திய கட்டடக் கலையைச் சார்ந்தது. இங்கு நடக்கும் வழிபாடும்கூட இந்துக்களின் சாயலை ஒத்ததாகவே இருக்கும். இங்கு நடக்கும் கந்தூரி திருவிழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வார்கள். தொலைபேசி - 04634-240566.

நெல்லையப்பர் - காந்திமதி கோயில்

நெல்லையின் முக்கியமான சிறப்பே நெல்லையப்பர் - காந்திமதி கோயில்தான். அம்மைக்கும் அப்பனுக்கும்தனிக் கோயில்கள் இங்கு உள்ளன. அரிய வேலைப்பாடுகள் உள்ள ஆவணங்கள், தங்க அல்லிக்குளம் இசைத் தூண்கள் ஆயிரங்கால் மண்டபம் போன்றவை இக்கோயிலின் தனிச்சிறப்புகள். தொலைபேசி - 0462 - 2339910.

சங்கரன் கோயில்

சிவனும், பெருமாளும் ஒருவராய் இணைந்திருக்கும் கோயில் என்பதால் இந்தக் கோயிலில் உள்ள மூலவர் சங்கர நாராயணர் ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தச் சிலையின் திருவடிகளை கதிரவன் தழுவுவதாகக் கூறப்படுகிறது. சிவனுக்கும் பார்வதிக்கும் தனித் தனி சந்நிதிகளும் இங்குண்டு. நெல்லையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது சங்கரன் கோயில். தொலைபேசி - 04636-222265.

முண்டன் துறை வனவிலங்கு சரணாலயம்

நெல்லையிலிருந்து 56 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த வனவிலங்கு சரணாலயம். இதன் பரப்பளவு 567 ச.மீட்டர்கள். இங்கு புலி, சிங்கவால் குரங்கு, கரடி, கேளை ஆடு, ஓநாய் போன்ற மிருகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. வனத்துறை அனுமதி பெற்று வாகனத்தில் சுற்றிப் பார்க்கலாம். முண்டன்துறை வன ஓய்வகத்தில் உணவு மற்றும் உறைவிட வசதி உள்ளது. தொலைபேசி - 04364-250594.

தென்காசி - காசி விஸ்வநாதர் கோயில்

வடநாட்டுக்கு ஒரு காசி இருப்பது போல் இது தென்னாட்டில் உள்ள காசி. தென்காசி பேருந்து நிலையம் அருகில்தான் காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. கோயிலின் நீளம் 554 அடி அகலம் 318 அடி. இதன் பிரமாண்டமான கோபுரத்தை 1456 ஆம் ஆண்டு பராக்கிரம பாண்டிய மன்னன் கட்டியுள்ளான். 1924 ஆம் ஆண்டு பேரிடி ஒன்று தாக்கியதில் இந்தக் கோபுரம் தகர்ந்து விழுந்தது. சமீபத்தில் 168 அடி உயரத்தில் மீண்டும் அந்தக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. இக்கோயிலில் 1927 ஆம் ஆண்டு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியால் தொடங்கப்பட்ட திருவள்ளுவர் கழகம் இன்றும் சிறப்பாகத் தமிழ்ப்பணியில் ஈடுபட்டு வருகிறது. நெல்லையிலிருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ளது தென்காசி. தொலைபேசி - 04633-222373.

திருக்குறுங்குடி

மேற்குத் தொடர்ச்சி மலையில் நம்பி ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகிய கிராமம். புராணங்களில் நாராயணன் வந்து இவ்வூரில் தங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ட்ரினிடி கதீட்ரல் தேவாலயம்

திருநெல்வேலியின் முக்கிய அடையாளங்களில் இதுவும் ஒன்று. 1826 ஆம் ஆண்டு ரெவரன்ட் ரெகினியஸ் என்பவரால் கட்டப்பட்ட அழகிய தேவாலயம். நெல்லையிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் முருகன் குறிச்சி என்ற இடத்தில் அமைந்துள்ளது.

திருவிடைமருதூர்

நெல்லையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகிய கோயில். இங்கு அதலநாதர் மற்றும் நரம்புநாதர் ஆகியோர் கோயில் கொண்டுள்ளனர். இக்கோயில் சேர சோழ பாண்டியர்கள் மட்டுமல்லாது விஜயநகரப் பேரரசின் கட்டுமான சிற்பக் கலைகளையும் பிரதிபலிக்கும் சாட்சியாக இருந்து வருகிறது.

வளநாடு

இந்த இடத்தை மான்களின் சரணாலயமாக அரசு அறிவித்து வருகிறது. நெல்லையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்தக் குன்றுப் பகுதியில் இந்தியாவிலேயே சிறந்த காவல்துறை துப்பாக்கிப் பயிற்சி நிலையம் ஒன்றும் உள்ளது.

திருவள்ளுவர் இரட்டைப் பாலம்

இந்தியாவிலேயே முதல் முதலாகக் கட்டப்பட்ட இரண்டடுக்குப் பாலம் இதுதான். நெல்லைச் சந்திப்பில் தண்டவாளத்தைக் குறுக்கே கடப்பதைத் தவிர்க்க இப்பாலம் கட்டப்பட்டது. இதன் நீளம் 800 மீட்டர் 25 குறுக்குத் தூண்கள் உள்ளன. இவற்றில் 13 தூண்கள் வில் வளைவாக 30.30 மீ அகலத்தில் உள்ளன. மற்ற 12 தூண்களும் 11.72 மீ அகலம் கொண்ட தாங்கிகள் ஆகும்.

வளநாடு பிளாக்பக் சரணாலயம்

தூத்துக்குடி பிளாக்பக் அருகே அமைந்துள்ள இந்தச் சரணாலயம் 16.41 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இங்கு சிங்கவால் குரங்குகள், புள்ளிமான்கள், காட்டுப்பூனை போன்றவை உள்ளன. இதைப் பார்வையிட எப்போது வேண்டுமானாலும் போகலாம்.

முகவரி - மாவட்ட வனத்துறை. திருநெல்வேலி பிரிவு. கொக்கிரகுளம். திருநெல்வேலி - 627 009.

கப்பல் மாதா தேவாலயம்

நெல்லையில் இருந்து 72 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்தச் சிறிய தேவாலயம். கோவாவைச் சேர்ந்த இறையியல் திருச்சபையின் கட்டுப்பாட்டில் இது உள்ளது. கடந்த 1903 ஆம் ஆண்டு இந்தத் தேவாலயம் ஒரு பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது. இங்குள்ள கன்னிகா மடத்தில் சென்று இரவில் தங்கும் இளம் பக்தைகளுக்கு அங்குள்ள மாதாவைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் தெரிவதாக் கூறப்படுகிறது. ஆனால் ஓரு மெழுகுவர்த்தி கூட இந்த ஆலயத்தில் ஏற்றப்படுவதில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

பூலித்தேவன் நினைவகம்

ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முதன்முதலாக போர் முரசு கொட்டியவன் மாவீரன் பூலித்தேவன். 1715 ஆம் ஆண்டு பிறந்த பூலித்தேவன் 1755 ஆம் ஆண்டு ஆங்கிலத் தளபதி ஆரோனுக்கு வரி தர மறுத்து சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கினான். தொடர்ந்து ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை புறமுதுது காட்டச் செய்தான். இத்தகைய மாவீரனை சங்கரன் கோயிலில் தனது இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்த போது வஞ்சகமாகக் பிடிக்க சுற்றி வளைத்தது ஆங்கிலேயப் படை. ஆனால் அவனோ அங்குள்ள குகை ஒன்றினுள் போனான். எதிரிகளிடம் சிக்கவும் இல்லை. என்ன ஆனான் என்று தெரியவும் இல்லை. இந்த மாவீரனுக்கென்று சிவகிரி வட்டம் நெற்கட்டும் செவலில் ஒரு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

Wednesday, April 1, 2015

NGO – Prerana - financial help for bright students

If you have come across any bright students coming from poor financial background who have finished their 10th standard this year and scored more than 80%, please ask them to contact the NGO – Prerana (Supported by Infosys foundation).
The NGO is conducting a written test and those who clear the test will be eligible for financial help for their further studies.
Please ask the students to contact the people mentioned below to get
the form:
580, Shubhakar, 44th cross,
1st A main road,
Jayanagar, 7th block,
Bangalore.
Contact numbers:
1. Ms. Saraswati - 99009 06338
2. Mr. Shivkumar - 99866 30301
3. Ms. Bindu - 99645 34667

தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டம்- தாமிரபரணி திட்டம்- அம்போ: 4 ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கிய ரூ.608 கோடி மாயம்

திருநெல்வேலி: தமிழகத்தின், முதல் நதிநீர் இணைப்புத் திட்டமான தாமிரபரணி திட்டம், நான்கு ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது.

தமிழகத்தின், முதல் நதிநீர் இணைப்பு திட்டம் என்ற பெயரோடு துவக்கப்பட்டது, தாமிரபரணி திட்டம். தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு - பச்சையாறு - கோரையாறு - எலுமிச்சையாறு என, ஒரே மாவட்டத்திற்குள், 73 கி.மீ., தூரத்திற்குள் ஆறு நதிகள் இணைக்கப்படுகின்றன. இதன்மூலம் நெல்லை, தூத்துக்குடியில், 6,840 ஏக்கர், தரிசு நிலம் பாசன வசதி பெறும்; 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும். 

* கடந்த தி.மு.க., ஆட்சியில், 2009 பிப்., 21ம் தேதி, 369 கோடி ரூபாய் திட்டமதிப்பில் பணி துவங்கியது.
* உடனடியாக, 213 கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டது. 
* கல்லிடைக்குறிச்சி, வெள்ளங்குழியில் தடுப்பணை கட்டப்பட்டது. 
@ணஞுதுtஞிணிடூதட்ண@ * திடியூர், மூலைக்கரைப்பட்டி, காரியாண்டி வழியாக, ராதாபுரம், எம்.எல்.தேரி குளத்திற்கு தண்ணீரை கொண்டு செல்ல, 73 கி.மீ., தூரத்திற்கு, கால்வாய் பணி துவங்கியது.
* வெள்ளங்குழி முதல், மூலைக்கரைப்பட்டி வரையிலும், 35 கி.மீ., தூரத்திற்கு, 213 கோடி ரூபாயில் கால்வாய் பணி முடிந்து விட்டது. 
* கடந்த 2011ல், அ.தி.மு.க., ஆட்சி வந்தபின், ஒரு பைசா கூட நிதி ஒதுக்கப்படவில்லை. திட்டத்தின் இரண்டாவது பாதியான, மூலைக்கரைப்பட்டியில் துவங்கி, காரியாண்டி, எம்.எல்.தேரி வரையிலான, 35 கி.மீ., தூரத்திற்கு, இன்னமும் கால்வாய் வெட்டப்படவில்லை. அ.தி.மு.க., அரசு வந்த வேகத்தில் முடித்திருந்தால், 2014க்குள் பணி முடிந்திருக்கும். ஆண்டுதோறும் மழையின் போதும், தாமிரபரணியில், 13 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. ஆனால், இந்த திட்டத்தின் மூலம், அந்த பகுதி மக்களுக்கு பகிர்ந்தளிப்பதோ, வெறும், மூன்று டி.எம்.சி., தண்ணீர் தான். 
@ணஞுதுtஞிணிடூதட்ண@ அ.தி.மு.க., அரசு, 2011ல் பொறுப்பேற்ற உடன்,
* 2011 - 12 பட்ஜெட்டில், தாமிரபரணிக்கு, 90 கோடி; காவிரி இணைப்பிற்கு, 93 கோடி ரூபாய்.* 2012 - 13ல், தாமிரபரணிக்கு, 100 கோடி; காவிரிக்கு, 50 கோடி ரூபாய்.
* 2013 - 14ல், 156.44 கோடி ரூபாய்.
*2014 - 15ல், 119.98 கோடி ரூபாய். 
* தற்போதைய, 2015 - 16 பட்ஜெட்டில், 253 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிதி முழுமையாக வந்தாலே, தாமிரபரணி திட்டத்தை எப்போதோ முடித்திருக்கலாம். மேலும், 2009ல்,தி.மு.க., துவக்கிய போது திட்ட மதிப்பீடு, 369 கோடி தான். ஆனால், தற்போது செலவு உயர்ந்துள்ள சூழலில், மறுமதிப்பீட்டின் மதிப்பு, 959 கோடி ரூபாயாகும். 
எனவே, இந்த திட்டத்தை இப்போது செயல்படுத்தாவிட்டால், இனி எப்போதும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதுவரை செலவழித்துள்ள, 213 கோடி ரூபாய், மக்கள் வரிப்பணமும் வீண் தான். கடந்த நான்கு ஆண்டு பட்ஜெட்டில், நதிநீர் திட்டங்களுக்காக தமிழக அரசு, 608 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக கூறுகிறது. அந்த நிதியோடு, தற்போது ஒதுக்கியுள்ள, 253 கோடி ரூபாயும் மாயமாகும் என்றே தெரிகிறது. 

Source : Dinamalar.comhttp://www.dinamalar.com/news_detail.asp?id=1220073

Wednesday, January 28, 2015

Bosch Gangaikondan has been inaugurated

Bosch India has inaugurated its sixth manufacturing unit in the country in Gangaikondan, Tamil Nadu. Built with an investment of around 500 million INR (6.2 million euro) and spread across 6,500 square meters of built up area, this new facility of Bosch Limited in India will facilitate the company’s Gasoline Systems business to further localize manufacturing and increase cost-competitiveness.

 The new facility is located in State Industries Promotion Corporation of Tamil Nadu (SIPCOT) and will produce powertrain sensors, fuel delivery modules and air management components for automotive and two-wheeler systems. “It is important for our Gasoline Systems business division to have a strong manufacturing foot-print in an important and growing market like India.




The extended local production capabilities in this new state-of-the art location will help Gasoline Systems to further grow its market share with a competitive product portfolio,” commented Dr. Steffen Berns, managing director of Bosch Limited on the inauguration of the plant.

 The plant was officially inaugurated by Dr. Stefan Kampmann, Executive Vice President, Gasoline Systems, Franz Hauber, Executive Vice President, Manufacturing and Quality, Bosch Limited and Sandeep N, Regional President Gasoline Systems, Bosch Limited. “The new plant is an important part of Bosch’s strategy to enter the competitive two-wheeler market in India with Electronic Fuel Injection systems,” added Sandeep N. Prior to the inauguration of this new manufacturing facility, Gasoline Systems division shared the Bosch Naganathapura manufacturing facility for its local production

Friday, January 2, 2015

Photos of reliance market - Tirunelveli


Tirunelveli River Linking Project - வெள்ளநீர் கால்வாயை வெட்டி முடிப்பது எப்போது?

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் வறட்சி பகுதிகளுக்கு வரப்பிரசாதம்
வெள்ளநீர் கால்வாயை வெட்டி முடிப்பது எப்போது? ரூ.369 கோடி திட்டம், தாமதமாவதால் ரூ.669 கோடியாக உயர்ந்து நிற்கிறது

50 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர்...!

இது சேமிக்கப்படும் தண்ணீர் அல்ல; வீணாகும் தண்ணீர்.

எங்கோ வீணாகும் தண்ணீர் அல்ல. நம் கண்முன்னே பாய்ந்தோடும் தாமிரபரணியில் இருந்து, ஆண்டு தோறும் கடலில் போய் கலக்கும் தண்ணீரின் சராசரி அளவுதான் இது.

பாபநாசம் அணை, முழுகொள்ளளவான 142 அடி நிரம்பினால், சுமார் 5,500 மில்லியன் கன அடி தண்ணீரை மட்டுமே அதில் தேக்க முடியும். அதைவிட, சுமார் 10 மடங்கு நீர் கடலில் போய் கலக்கிறது, என்றால் நம்ப முடிகிறதா?

பொதிகைமலையில் அடர்ந்த வனப்பகுதியான, பூங்குளம் என்ற குளத்தில் இருந்து தாமிரபரணி தனது பயணத்தை தொடங்குகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் புன்னக்காயல் என்ற இடத்தில் கடலோடு சங்கமிக்கிறது. நெல்லை மாவட்டத்தில் 80 கிலோ மீட்டர், தூத்துக்குடி மாவட்டத்தில் 40 கிலோ மீட்டர் என மொத்தம் 120 கிலோ மீட்டர் பாய்ந்து வளப்படுத்துகிறது.

தாமிரபரணி தென்மாவட்டங்களுக்கு தன்னையே தர அர்ப்பணித்து இருக்கிறது. ஆனால், அதை நாம் பயன்படுத்திக் கொண்டோமா? ஏன், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களையாவது வளப்படுத்தி இருக்கிறேமோ?

வெள்ளநீர் கால்வாய் திட்டம்

நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி, ராதாபுரம் தாலுகாக்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் தாலுகா பகுதிகள் வறண்டுவிட்டன. ஒருபுறம் செழிப்பு, இன்னொருபுறம் வறட்சி. அதற்கு தீர்வுதான் என்ன?

இவ்வாறு ஆராய்ந்து, “வெள்ளநீர் கால்வாய் திட்டம்“ என்ற ஒரு திட்டத்தை கொண்டுவந்தார்கள். அதன் மூலம் தாமிரபரணியில் இருந்து பாயும் உபரிவெள்ளத்தை வறட்சி பகுதிகளுக்கு திருப்பிவிட்டு, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 23 ஆயிரத்து 40 எக்டேர் நிலம் பாசன வசதியை ஏற்படுத்தி கொடுப்பதுதான். மேற்கண்ட தாலுகா பகுதிகள் செழிப்படைவதுடன், குடிநீர் பிரச்சினையும் தீர்க்கப்படும் என்பதற்காக வெள்ளநீர் கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது. 21-2-2009 அன்று இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

இந்த திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.369 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்தது. முதல் கட்டமாக ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டு, 2009-ம் ஆண்டில் பணிகள் நடைபெற்றன.

இதன் தொடர்ச்சியாக 2010-ம் ஆண்டு ரூ.41 கோடியும், 2011-ம் ஆண்டு ரூ.107 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன.

3-வது, 4-வது கட்ட பணிகள்

முதற்கட்டமாக கன்னடியன் கால்வாய் திட்டப்பணிகள் வெள்ளங்குளி முதல் திடீயூர் வரை 20.3 கிலோ மீட்டர் தூரமும், 2-வது கட்டமாக திடீயூர் முதல் மூலைக்கரைப்பட்டி வரை 18.6 கிலோ மீட்டர் தூரமும் கால்வாய் வெட்டப்பட்டு இருக்கிறது. பாலம் கட்டும் பணிகளும் நடந்து உள்ளன. ஆனால், 3, 4-வது கட்ட பணிகள் இன்னும் நடைபெறவில்லை.

மூலைக்கரைப்பட்டி முதல் காரியாண்டி வரை 12.7 கிலோமீட்டர் தூரம் 3-ம் நிலைப் பணிகளும், காரியாண்டி முதல் எம்.எல்.தேரிவரை உள்ள 21.4 கிலோமீட்டர் தூரம் கொண்ட 4-ம் நிலைப் பணிகளும் நடைபெறாமல் உள்ளன. இந்த கால்வாய் திட்டமானது, தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.

நெல்லை மாவட்டம் வெள்ளங்குளி முதல் தூத்துக்குடி மாவட்டம் எம்.எல்.தேரி வரை 73 கிலோமீட்டர் தூரத்துக்கு, இந்த வெள்ளநீர் கால்வாய் அமைக்கப்பட்டால்...

100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். வறட்சியின் பிடியில் சிக்கி உள்ள பகுதிகளில் நெல்லை மாவட்டத்தில் 177 குளங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 75 குளங்களும் நிரம்பும். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிணறுகளில் நல்ல நீரூற்று கிடைக்கும். கடல்நீர், நிலங்களுக்குள் உட்புகுவது தடுக்கப்படும்.

பருமழை பெய்யும் போது மட்டும் வீணாக கடலுக்கு செல்லும் சுமார் 13 ஆயிரத்து 758 மில்லியன் கன அடி தண்ணீரில், வெறும் 2 ஆயிரத்து 800 மில்லியன் கன அடி நீரை வெள்ளநீர் கால்வாயில் திருப்பிவிட்டாலே, மேற்கண்ட பயன்களை அடைந்துவிட முடியும்.

2009-ல் தொடங்கிய இந்த கால்வாய் பணிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி நடந்திருந்தால், 2012-ம் ஆண்டில் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், 3-வது, 4-வது கட்டப்பணிகள் முடிவடையாததால், வெள்ளநீர் கால்வாய், இன்னும் எட்டும் தூரத்தில் வரவில்லை.

இந்த திட்டத்துக்காக சேரன்மாதேவி, வீரவநல்லூர் பகுதியில் பாறைகளை உடைத்து கால்வாய் அமைத்து உள்ளனர். அந்த பாறை குவியல் மலைபோல் கால்வாய் கரைகளில் குவித்து போடப்பட்டு உள்ளது. அதில் தற்போது மரங்களும் முளைத்துவிட்டன.

ரூ.369 கோடியில் நிறைவேற்றப்பட வேண்டிய இந்த திட்டம் தொடர்ந்து தாமதமாகி வந்ததால், மேலும் ரூ.300 கோடி வரை, அதாவது ரூ.669 கோடி தேவைப்படும் என்று அனுமானமாக கூறப்படுகிறது.

15 நாட்கள் வெள்ளம்

கடந்த 2 மாதங்களில் மட்டும் பலத்த மழையால் தாமிரபரணி ஆற்றில் பல முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 15 நாட்களுக்கும் மேலாக தாமிரபரணியில் வந்த வெள்ளம், ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி வீணாக கடலில் சென்று கலக்கிறது. இந்த வெள்ளத்தால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன. இவ்வாறு வீணாகி கடலில் சேரும் தண்ணீரை பயன்படுத்தத்தான், வெள்ளநீர் கால்வாய் திட்டம் பெரிய அளவில் பயன்படுகிறது.

இந்த ஆண்டில் பருவமழை சரிவர பெய்து இருப்பதால், வறட்சியான பகுதிகளிலும் குளங்கள் நிரம்பி இருக்கின்றன. ஆனால், எல்லா ஆண்டிலும் இதுபோன்று மழை பெய்யும் என்று கூற முடியாது. அதுபோன்ற சூழ்நிலையில் வறண்டு கிடக்கும் ராதாபுரம், நாங்குநேரி, சாத்தான்குளம் தாலுகா பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க இந்த வெள்ளநீர் கால்வாய் திட்டம் தேவை.

இதற்காக கன்னடியன் கால்வாயில் இருந்து, வெள்ளநீர் கால்வாய்க்கு செல்லும் தலைமை மதகுக்கான பணி முடிந்து, தண்ணீரை வெளியேற்றுவதற்கு தயார் நிலையில் உள்ளது.

எனவே திட்டத்துக்கான 3, 4-வது கட்ட பணிகளையும் பாலம் பணிகளையும் விரைவாக முடிக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

நெய்க்கு அலைவது ஏன்?

“வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவது ஏன்?“ என்று ஓர் பழமொழி உண்டு.

அதுபோல் ஜீவநதி தாமிரபரணியை வைத்துக்கொண்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில், குடிநீருக்கும், பாசன நீருக்கும் நாம் அல்லோல படுவது என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.

பொதுமக்கள் இதில் விழித்தால்தான், அரசியல்வாதிகள் தங்கள் பாதைகளை மாற்றிக்கொள்வார்கள்.

வெறும் இலவசம், மானியம் போன்ற திட்டங்களில் மதிமயங்கி கிடந்தால் இதுபோன்ற எதிர்கால திட்டங்கள் கேள்விக்குறியாகி விடும்.


Thank you dailyThanthi : http://epaper.dailythanthi.com/showxml.aspx?id=16501163&code=2661