Monday, December 29, 2025

punyahavaachanam Function

 Requirements


Brass Sombu – 1 litre capacity


Raw rice – 500 grams


Coconut – 1


Mango leaves – 1 bunch


Thamboolam


Plantain fruits – 2 (for Neivedhyam)


Panchathra Uthurini (small spoon)


Small plate


Turmeric powder (Manjal)


Kumkum


Sandalwood powder


Dakshinai


Flowers for Archanai


Darbhai – Pavithram and Koorcham


Clean drinking water


Procedure


Pour clean drinking water into the brass sombu.


Decorate the sombu with:


Mango leaves


Coconut (smeared with turmeric powder, sandalwood paste, and kumkum)


Place Darbhai Pavithram and Koorcham properly.


Do Aavahanam of Varuna Bhagavan.


Perform Upachara Pooja with Sankalpam.


Chant Pavamana Sooktham:


If there is one Sasthrigal – chant 4 times


If there are four Sasthrigals – chant 1 time each


After chanting, sprinkle the water all over the house.


Finally, give the water to everyone in the house to drink.


Time Required


This pooja can be completed within 30 minutes.



தேவைகள்


பித்தளை சோம்பு – 1 லிட்டர் கொள்ளளவு


பச்சை அரிசி – 500 கிராம்


தேங்காய் – 1


மா இலை – 1 கொத்து


தம்பூலம்


வாழைப்பழங்கள் – 2 (நெய்வேத்யம்)


பஞ்சத்ரா உத்துரிணி (சிறிய கரண்டி)


சிறிய தட்டு


மஞ்சள் தூள் (மஞ்சல்)


குங்குமம்


சந்தனப் பொடி


தட்சிணை


அர்ச்சனைக்கு மலர்கள்


தர்பாய் - பவித்ரம் மற்றும் கூர்ச்சம்


சுத்தமான குடிநீர்


செயல்முறை


பித்தளை சோம்புவில் சுத்தமான குடிநீரை ஊற்றவும்.


சோம்புவை அலங்கரிக்கவும்:


மா இலைகள்


தேங்காய் (மஞ்சள் தூள், சந்தன விழுது மற்றும் குங்குமம் சேர்த்து பூசப்பட்டது)


தர்பாய் பவித்ரம் மற்றும் கூர்ச்சம் ஆகியவற்றை சரியாக வைக்கவும்.


வருண பகவானின் ஆவாகனம் செய்யுங்கள்.


சங்கல்பத்துடன் உபாச்சார பூஜை செய்யவும்.


பவமன சூக்தம் என்ற நாமஜபம்:


சாஸ்திரிகள் இருந்தால் – 4 முறை ஜபம் செய்யுங்கள்


நான்கு சாஸ்திரிகள் இருந்தால் – தலா 1 முறை ஜபம் செய்யுங்கள்


நாமஜபம் செய்த பிறகு, வீடு முழுவதும் தண்ணீரை தெளிக்கவும்.


இறுதியாக, வீட்டில் உள்ள அனைவருக்கும் குடிக்க தண்ணீரைக் கொடுங்கள்.


தேவையான நேரம்


இந்த பூஜையை 30 நிமிடங்களில் முடிக்க முடியும்.

Monday, July 28, 2025

பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியாக என்னென்ன போட்டித் தேர்வுகள் உள்ளன? வெற்றி பெற்றால் எவ்வளவு தொகை மாதம் தோறும் வழங்கப்படும்? என்பது குறித்த தகவல்...

 எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பதினோராம் வகுப்பு மாணவர்கள் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு....

பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியாக என்னென்ன போட்டித் தேர்வுகள் உள்ளன?

 வெற்றி பெற்றால் எவ்வளவு தொகை மாதம் தோறும் வழங்கப்படும்?

என்பது குறித்த தகவல்...

NMMS, NTSE, trust, tn chief minister talent exam... Etc., 👇👇👇




Friday, August 30, 2024

Nellai 30-08-2024

 


Monday, July 29, 2024

தூத்துக்குடி சிறுவனின் அசத்தல் சாதனை!200 ரூபாயை வைத்து 10 கோடி சம்பாத்தியம்!!

 துரையை சேர்ந்த பாடசாலை மாணவன், பெற்றோர் அளித்த 200 ரூபாயில் தொடங்கிய தொழில் இன்று ரூ 10 கோடி மதிப்பிலான நிறுவனமாக வளர்ந்துள்ளது.




எவரும் மதிப்பளிக்கவில்லை


மதுரையை சேர்ந்த 22 வயது சூர்ய வர்ஷன் என்பவரது Naked Nature என்ற நிறுவனம் உருவான கதை பலருக்கும் ஊக்கமளிப்பதாகும். 12ம் வகுப்பு படிக்கும் போது தங்களின் வீட்டு சமையலறையில் மிக எளிமையான முறையில் உருவாக்கியது தான் செம்பருத்தி குளியல் உப்பு.




அதுவும் அவரது பெற்றோர் அளித்த பணத்தில் சேமித்த 200 ரூபாயில் தொடங்கியுள்ளார் சூர்ய வர்ஷன். தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர் என்பதால், அங்கிருந்து தனது தயாரிப்புக்கு தேவையான உப்பை வரவழைத்துள்ளார்.

ஆனால் தொடக்கத்தில் சூர்யாவின் தயாரிப்புக்கு எவரும் மதிப்பளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. அவரது வயதை குறிப்பிட்டு, விளையாட்டுப் பொருள் என்றே நிராகரித்துள்ளனர்.

ஆனால் ஆயுர்வேத மருத்துவர் ஒருவர், சூர்யா தயாரித்துள்ள பொருளில் ஈர்க்கப்பட்டு குறிப்பிடத்தக்க அளவுக்கு வாங்கவே, அதுவே இதுவரையான அவரது வளர்ச்சிக்கு முதற்படியாக அமைந்துள்ளது.

நம்பி களமிறங்கிய சூர்யா

எதிர்பாராத இந்த திருப்புமுனை சூர்யாவின் நம்பிக்கையை அதிகப்படுத்தியது. இதனையடுத்து மதுரையில் ஒரு கல்லூரியில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் படித்தார். அத்துடன், தமது தொழிலுக்கு முதலீடு திரட்டும் பொருட்டு டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த ஒன்லைன் வகுப்புகள் மூலம் சுமார் ரூ 2.20 லட்சம் சம்பாதித்தார்.

தாம் சம்பாதித்ததை அப்படியே தமது கனவு நிறுவனமான Naked Nature-ல் முதலீடு செய்தார். தற்போது Naked Nature நிறுவனம் பல வகையில் 70 தயாரிப்புகளை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

2021 மற்றும் 2022ல் மட்டும் Naked Nature நிறுவனம் ரூ 56 லட்சம் அளவுக்கு விற்பனை முன்னெடுத்துள்ளது. மதுரையை சேர்ந்த இந்த நிறுவனம் தற்போது இணையமூடாக தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிலும் பிரபலமடைந்து வருகிறது.

வெறும் 200 ரூபாய் முதலீட்டில், உப்பை நம்பி களமிறங்கிய சூர்யா, இன்று ரூ 10 கோடி சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக வளர்த்துள்ளார்.

Thursday, January 4, 2024

அகதிகள்போல் இடம்பெயறும் தென் தமிழக மக்கள்.. இப்படியொரு அவலமா? தனியார் வானிலை ஆய்வாளர் ஆதங்கம் : People of south tamil nadu are migrating like refugees for jobs

    தென் மாவட்டங்களில் போதிய வேலைவாய்ப்பு திட்டங்களை மேற்கொள்ளாத காரணத்தால் அகதிகளை போல தென் தமிழ்நாட்டு மக்கள் இடம்பெயர்வதாக வேதனையை பதிவு செய்து இருக்கிறார் தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா. 

 தென் மாவட்ட பெரு மழையை துல்லியமாக கணித்த தென்காசி வெதர்மேன் என்று அழைக்கப்படும் ராஜா ஒரு விரிவான பதிவை வெளியிட்டு உள்ளார். அதில், "அகதிகளை போல இடம் பெயரும் தென்தமிழக மக்கள்: புறக்கணிக்கப்படுகிறதா தென் மாவட்டங்கள்? ஊர் கோவில் கொடைகளுக்கும், தீபாவளி, பொங்கல் திருவிழாக்களுக்கும், கிறிஸ்துமசுக்கும், ரம்ஜானுக்கும் சென்னையிலிருந்தும், கோவையிலிருந்தும், தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்து 4 நாட்கள் தங்கிவிட்டு ஏக்கத்தோடு மீண்டும் பஸ்சோ, ரயிலோ ஏறிச் செல்கிறது தென் மாவட்டத்தைச் சேர்ந்த "ஒரு தலைமுறை." 




 ஆம்.. கடந்த ஒரு தலைமுறையாகவே, தங்கள் சொந்த மாநிலத்திற்கு உள்ளே.. புலம் பெயர் தமிழர்களாகத்தான் வாழ்கிறார்கள் தென் மாவட்ட மக்கள். சுமார் ஏழேகால் கோடி மக்கள் தொகை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு) கொண்ட தமிழ்நாட்டில் ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் தென் மாவட்டங்களில் வாழ்கின்றனர். அதில் அதிகப்படியாக 33.22 லட்சம் பேர் திருநெல்வேலி மாவட்டத்திலும் 30.38 லட்சம் பேர் மதுரை மாவட்டத்திலும் வசிக்கின்றனர். 

  அதிக மாநகராட்சிகளை கொண்ட தென் தமிழகம் : அதிக மாநகராட்சிகள் பெற்ற தென் மாவட்டங்கள் வளர்ச்சி அடைந்து விட்டதா என்று பார்த்தால் அதுதான் இல்லை. தமிழகத்தின் கடைக் கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள நாகர்கோயிலில் பிரதான தொழில். மீன்பிடித்தலும், அதனை சார்ந்த சந்தைப் படுத்துதலும் வளர்ச்சியின் முக்கிய ஆதாரங்கள். வேறு ஏதேனும்... குறிப்பிடத்தக்க வகையில் பொருளாதார ரீதியாக வாழ்க்கை தரத்தை உயர்த்தும் அளவுக்கு ஆலைகளோ... சென்னையில் பரந்து விரிந்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களோ இங்கு இல்லை. 

 அகதிகளை போல இடம் பெயரும் மக்கள்: கண்கூடாக, அகதிகளை போல தென் தமிழக மக்கள் இடம் பெயர்ந்து வாழ்வதை அறிந்தும், இதுவரை மாநில அரசுகள் செய்தது என்ன? தென் மாவட்டங்களுக்கு ஏன் பாரபட்சம்? தென் தமிழகத்திற்கு சென்னையிலிருந்து கூடுதலாக ரயில் விட வேண்டும் என்று கேட்கிறோமே, இருக்கும் ரயில்களை குறைக்க.. அவர்களை அவர்களின் நிலங்களிலேயே வாழ வைக்க வழி என்ன என்று இதுவரை கேட்டுள்ளோமா? சென்னையில் ஒரு நெல்லைக்காரரையும், தூத்துக்குடிக்காரரையும் பார்க்க முடியும்போது, இந்த மாவட்டங்களில் ஒரு சென்னைக்காரர் குடும்பத்தோடு குடி பெயர்ந்து வந்துள்ளதை பரவலாக பார்க்க முடிகிறதா? 

 பச்சைக் குழந்தைக்கும் தெரியுமே, இது பாரபட்சமின்றி வேறு என்ன? சமீபத்தில் தென் மாவட்டம் தொடர்பாக கேட்ட பெரிய திட்டமே, எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரை பக்கம் அமைப்பது பற்றிதான். அதுவும் செங்கல் நட்டதோடு கிணற்றில் போட்ட கல் போல கிடப்பில் போய் விட்டது. அதுபோலத்தான்  நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம்.

  கூடங்குளம் அணுமின் நிலையத்தால் உருவான கட்டமைப்பால், சுற்றுவட்டாரத்தில் சில கிராமங்களுக்கு கூடுதலாக மருத்துவ வசதி கிடைத்துள்ளது, உடன்குடி அனல் மின் நிலையம் அமைக்கும் பணியால் கொஞ்சம் வேலை உருவாகும் எனக் கூறப்படுகிறது, குலசை ராக்கெட் ஏவுதளம் திட்டமும் அப்படித்தான். 

 ஆனால் இவை அனைத்திலும் ஒரு ஒற்றுமை கவனித்தீர்களா. எல்லாமே மத்திய அரசின் திட்டம். பரவாயில்லை.. ஏதோ ஒரு அரசு, இதையாவது செய்கிறதே என்றும் கடந்து போய் விட முடியாது இங்கும் தமிழர்களுக்கு போதுமான வேலைவாய்ப்பு எதுவும் இல்லை. வளர்ச்சியில் பின்தங்கிய இராமநாதபுரம், விருதுநகர்: நாடு முழுவதும், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வங்கி கடன் வசதி, ஊட்டச்சத்து, இணையதள வசதி, அடிப்படை உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், தொழிற்சாலைகளை பெருக்குதல், கிராம சாலைகள் இணைப்பு, விவசாயம், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அடிப்படையில் வளர்ச்சியில் பின் தங்கிய 115 மாவட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் இந்த பட்டியலில் உள்ளன. திண்டுக்கல், மதுரை, தேனி, இராமநாதபுரம், விருதுநகர் சிவகங்கை தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி தென்காசி ஆகிய 10 தென் மாவட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசு முன் வர வேண்டும். மக்களின் கருத்துக்களை பதிவிடுங்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Private meteorologist Raja has expressed his anguish that the people of South Tamil Nadu are migrating like refugees due to insufficient employment programs in the south districts

Sunday, December 17, 2023

TV- schedule

 





Saturday, December 9, 2023

18 வயதில் உங்கள் பிள்ளைக்கு நீங்கள் கற்றுத் தர வேண்டிய ‘ஃபைனான்ஷியல்’ பாடங்கள்..!

 



18 வயதில் உங்கள் பிள்ளைக்கு கற்றுத் தர வேண்டிய முக்கியமான நிதி (ஃபைனான்ஷியல்) பாடங்கள் பல உள்ளன. இவை அவர்களின் எதிர்கால நிதி நிலையை மேம்படுத்த உதவும். சில முக்கியமான பாடங்கள்:

  1. பண மேலாண்மை: பணத்தை எப்படி செலவழிக்க வேண்டும், சேமிக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை அறிவு.
  2. முதலீடு: பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட்ஸ் போன்றவற்றில் முதலீடு செய்வது எப்படி.
  3. கடன் மேலாண்மை: கடன்களை எடுக்கும்போது கவனிக்க வேண்டியவை மற்றும் அவற்றை சரியாக திருப்பிச் செலுத்துவது எப்படி.
  4. விமா (Insurance): வாழ்க்கை மற்றும் மருத்துவ காப்பீடுகள் எதற்காக முக்கியம்.
  5. அவசர நிதி: அவசர காலங்களில் உதவக்கூடிய நிதியை சேமித்து வைப்பது எப்படி.
  6. பட்ஜெட் அமைத்தல்: மாதாந்திர செலவுகளை திட்டமிடுவது மற்றும் அவற்றை கண்காணிப்பது.








20 வயது to 70 வயது... பணக் கஷ்டம் இல்லாமல் வாழ... ஃபாலோ செய்ய வேண்டிய 5 X 10 ஃபார்முலா!


20 வயது முதல் 70 வயது வரை பணக் கஷ்டம் இல்லாமல் வாழ, நீங்கள் பின்பற்ற வேண்டிய 5 x 10 ஃபார்முலா பற்றி சில முக்கியமான விஷயங்களை இங்கே பகிர்கிறேன்:

  1. சேமிப்பு: உங்கள் வருமானத்தின் 10% சேமிக்க வேண்டும். இது அவசர கால நிதி மற்றும் எதிர்கால தேவைகளுக்காக உதவும்.
  2. முதலீடு: உங்கள் வருமானத்தின் 10% முதலீடு செய்ய வேண்டும். இது பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட்ஸ், அல்லது ரியல் எஸ்டேட் போன்றவற்றில் இருக்கலாம்.
  3. காப்பீடு: உங்கள் வருமானத்தின் 10% காப்பீடு பாலிசிகளுக்காக ஒதுக்க வேண்டும். இது மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு போன்றவற்றை உள்ளடக்கியது.
  4. கடன் திருப்பிச் செலுத்துதல்: உங்கள் வருமானத்தின் 10% கடன் திருப்பிச் செலுத்துவதற்காக பயன்படுத்த வேண்டும். இது உங்கள் கடன் சுமையை குறைக்க உதவும்.
  5. தன்னம்பிக்கை வளர்ப்பு: உங்கள் வருமானத்தின் 10% தன்னம்பிக்கை வளர்ப்பதற்காக பயன்படுத்த வேண்டும். இது கல்வி, திறன் மேம்பாடு போன்றவற்றில் முதலீடு செய்யலாம்



Saturday, December 2, 2023