Tuesday, March 7, 2023

நாங்குநேரி அருகே வீடு புகுந்து திருடிய கணவன், மனைவி உட்பட 4 பேர் கைது

 கடந்த 1-ந் தேதி சுப்பையாவின் மனைவி வீட்டின் முன் பக்க கதவை பூட்டி விட்டு, பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டார்.

இதையடுத்து கணவன் மனைவி உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

களக்காடு:


நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு கோவைகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 41). விவசாயி.


16 பவுன் நகை திருட்டு


கடந்த 1-ந் தேதி காலை இவர் விவசாய பணிகளுக்கு சென்று விட்டார். அவரது மனைவி வீட்டின் முன் பக்க கதவை பூட்டி விட்டு, பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டார்.


இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்கம் வழியாக வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த வளையல், செயின், கை செயின், கம்மல், மோதிரம் உள்ளிட்ட 16 பவுன் 5 கிராம் எடையுள்ள தங்க நகைகளையும் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை யும் திருடி சென்று விட்டனர்.


போலீசார் விசாரணை


திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். வீட்டிற்கு திரும்பி வந்த கிருஷ்ணவேணி நகைகள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி சுப்பையா மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


இதில் களக்காடு ஜெ.ஜெ.நகரை சேர்ந்த கசமுத்து (65), அவரது மனைவி சாந்தி (50), துரை (45) மற்றும் 14 வயது சிறுவன் ஆகிய 4 பேரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.


கடந்த 1-ந் தேதி 4 பேரும் குப்பை சேகரிப்பதற்காக கோவைகுளம் சென்ற போது, சுப்பையாவின் வீட்டு பின் பக்க கதவு திறந்திருந்ததை பார்த்து உள்ளே சென்றுள்ளனர்.


அங்கு பீரோவின் சாவி பீரோவிலேயே இருந்ததால், பீரோவை திறந்து நகைகளையும் செல்போனையும் திருடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து கணவன் மனைவி உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

விவசாயி வீட்டில் 16 பவுன் நகைகள் திருட்டு

 திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே விவசாயி வீட்டில் பட்டப் பகலில் 16 பவுன் நகைகள் திருட்டு போயுள்ளது.

மூன்றடைப்பு அருகேயுள்ள கோவைகுளம் வடக்குத் தெருவை சோ்ந்த விவசாயி சுப்பையா (41). இவா் திருநெல்வேலியில் உள்ள சந்தைக்கு புதன்கிழமை சென்ற நிலையில், இவரது மனைவி கிருஷ்ணவேணி வீட்டைப் பூட்டி விட்டு அருகேயுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதை நோட்டமிட்ட மா்ம நபா்கள், பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 16 பவுன் 5 கிராம் எடையுள்ள நகைகள், கைப்பேசி ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனா்.

வீட்டுக்குத் திரும்பி வந்த கிருஷ்ணவேணி, வீட்டில் திருட்டு நடந்துள்ளது குறித்து சுப்பையாவிடம் தெரிவித்தாா். இதையடுத்து மூன்றடைப்பு காவல் நிலையத்தில் சுப்பையா கொடுத்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.