Sunday, December 17, 2023
Saturday, December 9, 2023
18 வயதில் உங்கள் பிள்ளைக்கு நீங்கள் கற்றுத் தர வேண்டிய ‘ஃபைனான்ஷியல்’ பாடங்கள்..!
18 வயதில் உங்கள் பிள்ளைக்கு கற்றுத் தர வேண்டிய முக்கியமான நிதி (ஃபைனான்ஷியல்) பாடங்கள் பல உள்ளன. இவை அவர்களின் எதிர்கால நிதி நிலையை மேம்படுத்த உதவும். சில முக்கியமான பாடங்கள்:
- பண மேலாண்மை: பணத்தை எப்படி செலவழிக்க வேண்டும், சேமிக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை அறிவு.
- முதலீடு: பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட்ஸ் போன்றவற்றில் முதலீடு செய்வது எப்படி.
- கடன் மேலாண்மை: கடன்களை எடுக்கும்போது கவனிக்க வேண்டியவை மற்றும் அவற்றை சரியாக திருப்பிச் செலுத்துவது எப்படி.
- விமா (Insurance): வாழ்க்கை மற்றும் மருத்துவ காப்பீடுகள் எதற்காக முக்கியம்.
- அவசர நிதி: அவசர காலங்களில் உதவக்கூடிய நிதியை சேமித்து வைப்பது எப்படி.
- பட்ஜெட் அமைத்தல்: மாதாந்திர செலவுகளை திட்டமிடுவது மற்றும் அவற்றை கண்காணிப்பது.
20 வயது to 70 வயது... பணக் கஷ்டம் இல்லாமல் வாழ... ஃபாலோ செய்ய வேண்டிய 5 X 10 ஃபார்முலா!
20 வயது முதல் 70 வயது வரை பணக் கஷ்டம் இல்லாமல் வாழ, நீங்கள் பின்பற்ற வேண்டிய 5 x 10 ஃபார்முலா பற்றி சில முக்கியமான விஷயங்களை இங்கே பகிர்கிறேன்:
- சேமிப்பு: உங்கள் வருமானத்தின் 10% சேமிக்க வேண்டும். இது அவசர கால நிதி மற்றும் எதிர்கால தேவைகளுக்காக உதவும்.
- முதலீடு: உங்கள் வருமானத்தின் 10% முதலீடு செய்ய வேண்டும். இது பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட்ஸ், அல்லது ரியல் எஸ்டேட் போன்றவற்றில் இருக்கலாம்.
- காப்பீடு: உங்கள் வருமானத்தின் 10% காப்பீடு பாலிசிகளுக்காக ஒதுக்க வேண்டும். இது மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு போன்றவற்றை உள்ளடக்கியது.
- கடன் திருப்பிச் செலுத்துதல்: உங்கள் வருமானத்தின் 10% கடன் திருப்பிச் செலுத்துவதற்காக பயன்படுத்த வேண்டும். இது உங்கள் கடன் சுமையை குறைக்க உதவும்.
- தன்னம்பிக்கை வளர்ப்பு: உங்கள் வருமானத்தின் 10% தன்னம்பிக்கை வளர்ப்பதற்காக பயன்படுத்த வேண்டும். இது கல்வி, திறன் மேம்பாடு போன்றவற்றில் முதலீடு செய்யலாம்
Saturday, December 2, 2023
Tuesday, November 14, 2023
Saturday, November 11, 2023
Friday, November 10, 2023
Thursday, November 9, 2023
Wednesday, November 8, 2023
Wednesday, November 1, 2023
Monday, October 2, 2023
மூன்றடைப்பு அருகே வீட்டில் உறவினர் நகையை மறைத்து வைத்த பெண் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
நாங்குநேரி:
தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரம் வேளாங்கண்ணி தெருவை சேர்ந்த மாடக்கண்ணன் மனைவி செல்வமணி (வயது 30). இவரும், இவரது கணவரும், தாய் பிச்சம்மாள் ஆகியோரும் மூன்றடைப்பு அருகே உள்ள பனையங்குளம் கிராமத்தில் கொடை விழாவிற்காக உறவினர் சுப்பையா வீட்டிற்கு கடந்த 24-ந் தேதி வந்திருந்தனர். விழா முடிந்து ஊருக்கு புறப்படுவதற்காக கொண்டு வந்த பொருட்களையும், நகைகளையும் பாதுகாப்பாக பேக்கிங் செய்தனர். இந்தநிலையில் நேரம் அதிகமாகி விட்டதால் அங்கேயே மீண்டும் தங்கி நேற்று காலை ஊருக்கு புறப்பட தயாராகினார்கள்.
அப்போது அவர்கள் பையில் வைத்திருந்த நகையை பார்த்தபோது அதில் இருந்த 22 பவுன் நகைகள் மாயமாகின. இதனால் அதிர்ச்சியடைந்து அவர்கள் உடனடியாக மூன்றடைப்பு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் மூன்றடைப்பு போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது சுப்பையா மனைவி முத்துலட்சுமி (45) நகைகளை எடுத்து மறைத்து வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக நகைகளை மீட்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து முத்துலட்சுமியை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.
மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் கருத்தரங்கம் நடந்தது.
திருநெல்வேலி
இட்டமொழி:
மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜின்னா ஷேக் முகமது தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரி கணினி அறிவியல்துறை பேராசிரியர் வள்ளிரதி பேசினார். இதையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர். ஏற்பாடுகளை கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவர் பிச்சம்மாள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் செய்யது முகம்மது அலி, ஹஷீனத் ஜஸீலா ஆகியோர் செய்திருந்தனர்.
மூன்றடைப்பு அருகே டீக்கடை பூட்டை உடைத்து பணத்தை மர்மநபர் திருடிச் சென்றார்.
திருநெல்வேலி
நாங்குநேரி:
மூன்றடைப்பு அருகே உள்ள மருதகுளத்தை சேர்ந்த சேகர் மனைவி அன்னலட்சுமி (வயது 51). இவர் மருதகுளம் மெயின் ரோட்டில் உள்ள பள்ளி எதிரே டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் காலையில் அன்னலட்சுமி தனது கடைக்கு சென்ற போது கடை பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாா். இதுகுறித்து மூன்றடைப்பு போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்திய போது கடையில் இருந்த ரூ.3500 திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Tuesday, March 7, 2023
நாங்குநேரி அருகே வீடு புகுந்து திருடிய கணவன், மனைவி உட்பட 4 பேர் கைது
கடந்த 1-ந் தேதி சுப்பையாவின் மனைவி வீட்டின் முன் பக்க கதவை பூட்டி விட்டு, பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டார்.
இதையடுத்து கணவன் மனைவி உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு கோவைகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 41). விவசாயி.
16 பவுன் நகை திருட்டு
கடந்த 1-ந் தேதி காலை இவர் விவசாய பணிகளுக்கு சென்று விட்டார். அவரது மனைவி வீட்டின் முன் பக்க கதவை பூட்டி விட்டு, பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்கம் வழியாக வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த வளையல், செயின், கை செயின், கம்மல், மோதிரம் உள்ளிட்ட 16 பவுன் 5 கிராம் எடையுள்ள தங்க நகைகளையும் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை யும் திருடி சென்று விட்டனர்.
போலீசார் விசாரணை
திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். வீட்டிற்கு திரும்பி வந்த கிருஷ்ணவேணி நகைகள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி சுப்பையா மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் களக்காடு ஜெ.ஜெ.நகரை சேர்ந்த கசமுத்து (65), அவரது மனைவி சாந்தி (50), துரை (45) மற்றும் 14 வயது சிறுவன் ஆகிய 4 பேரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
கடந்த 1-ந் தேதி 4 பேரும் குப்பை சேகரிப்பதற்காக கோவைகுளம் சென்ற போது, சுப்பையாவின் வீட்டு பின் பக்க கதவு திறந்திருந்ததை பார்த்து உள்ளே சென்றுள்ளனர்.
அங்கு பீரோவின் சாவி பீரோவிலேயே இருந்ததால், பீரோவை திறந்து நகைகளையும் செல்போனையும் திருடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து கணவன் மனைவி உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விவசாயி வீட்டில் 16 பவுன் நகைகள் திருட்டு
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே விவசாயி வீட்டில் பட்டப் பகலில் 16 பவுன் நகைகள் திருட்டு போயுள்ளது.
மூன்றடைப்பு அருகேயுள்ள கோவைகுளம் வடக்குத் தெருவை சோ்ந்த விவசாயி சுப்பையா (41). இவா் திருநெல்வேலியில் உள்ள சந்தைக்கு புதன்கிழமை சென்ற நிலையில், இவரது மனைவி கிருஷ்ணவேணி வீட்டைப் பூட்டி விட்டு அருகேயுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதை நோட்டமிட்ட மா்ம நபா்கள், பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 16 பவுன் 5 கிராம் எடையுள்ள நகைகள், கைப்பேசி ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனா்.
வீட்டுக்குத் திரும்பி வந்த கிருஷ்ணவேணி, வீட்டில் திருட்டு நடந்துள்ளது குறித்து சுப்பையாவிடம் தெரிவித்தாா். இதையடுத்து மூன்றடைப்பு காவல் நிலையத்தில் சுப்பையா கொடுத்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.