காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு அன்பான வேண்டுகோள்.
திருநெல்வேலி மாநகரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜாதி மோதல்கள், அனுமதி பெறாத ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் மற்றும் வீண் சண்டை சச்சரவுகளில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரிய வேலைவாய்ப்பு கிடைத்தும், மேற்படி அவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்களால் வேலைக்கு செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதை கவனத்தில் கொண்டு மாணவர்கள் தங்களுடைய வருங்கால நல்வாழ்க்கையினை மனதில் கொண்டு ஒழுக்கத்துடனும்,
சாதி மோதல்கள் மற்றும் வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமலும்
உரிய அனுமதி பெறாத ஆர்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் பங்கு பெறுவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.
சட்டத்திற்கு புறம்பாக எவ்வித செயல்களில் ஈடுபடாமல், அரசு அதிகாரிகள் மேற்கொள்ளும் சட்டரீதியான செயல்களுக்கு இடையூறு செய்யாமலும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த அறிவுரைகளை பெற்றோர்கள், கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு எடுத்துக்கூறி விளைவுகள் குறித்தும் அவ்வப்போது அறிவுறுத்துவதோடு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இது சம்பந்தமான தகவல்களை தெரிவிக்க வேண்டும் என மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு காவல்துறை சார்பில் காவல் சரக துணைத்தலைவர் திரு. கபில் குமார் சரட்கர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எதிர்கால இந்தியா இளைஞர் கையில், மாணவர்கள் செய்யும் சிறு தவறு அவர்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விட கூடாது.